தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நீலகிரி, கோவைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
24
சென்னை மழைக்கு வாய்ப்பு
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
34
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மலை பகுதிகள், கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.