10,000 பேருடன் வைத்திலிங்கம் மாஸ் என்ட்ரி.. வியந்துபோன ஸ்டாலின்.. சீட் கன்பார்ம்.. உ.பி.க்கள் அப்செட்!

Published : Jan 26, 2026, 04:35 PM IST

திமுகவில் சேர்ந்த கையோடு வைத்திலிங்கம் அதிமுகவில் இருந்து 10,000 பேரை தட்டித் தூக்கி திமுகவில் சேர்த்தது கண்டு ஸ்டாலின் வியந்து போய் விட்டார். ஸ்டாலின் மனதில் இடம் பிடித்த அவருக்கு  தேர்தலில் போட்டியிட சீட் கன்பார்ம் என தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
திமுகவில் இணைந்த வைத்திலிங்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஓபிஎஸ் பக்கம் நின்றார். ஆனால் ஓபிஎஸ் எந்த ஒரு சரியான முடிவும் எடுக்க முடியாமல் திணறுவதால் ஓபிஎஸ் உடன் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவுக்கு சென்றார். அதே பாதையை பின்பற்றி வைத்திலிங்கமும் திமுகவிலை இணைந்தார்.

24
10,000 பேரை திமுகவில் சேர்த்த வைத்திலிங்கம்

டெல்டாவில் ஓரளவு செல்வாக்கு பெற்ற வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என அதிமுகவினர் 10,000 பேரை இன்று (ஜனவரி 26) திமுகவில் இணைத்துள்ளார். திமுகவில் சேர்ந்த உடனேயே வைத்திலிங்கம் பெரும் படையை திமுகவில் சேர்த்தது திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் திமுகவில் நடந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் வைத்திலிங்கத்தை புகழ்ந்து தள்ளி விட்டார். ''முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நான் எதிர்பார்த்தது; நான் எதிர்பார்த்ததைவிட அதிகமான அளவிற்கு இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல; திமுகவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வந்திருக்கிறது.

34
அதிமுகவில் சுயமரியாதையோடு இல்லை

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அம்மையார் ஜெயலலிதா தலைமையில் வைத்திலிங்கம் அவர்களுக்கு விசுவாசமாக இருந்து, சிறப்பாக சுறுசுறுப்பாக அனைவரையும் கவரும் வகையில் அவர் பணியாற்றும் காட்சியை நான் பார்த்ததுண்டு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் சுயமரியாதையோடு நாம் இருக்க முடியவில்லையே; சுயமரியாதையோடு நாம் பணியாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் அவருடைய உள்ளத்தில் இருந்திருக்கிறது.

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார்

என்ன, அவர் சற்று லேட்டாக வந்து சேர்ந்திருக்கிறார். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக பணியாற்றப் போகிறார். இதுதான் நமக்கெல்லாம் மகிழ்ச்சி. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நாம் மிகப்பெரிய வெற்றியை நாம் பெறப்போகிறோம் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வைத்திலிங்கத்தையும் உங்களையும் வரவேற்று மீண்டும் நம்முடைய திராவிட மாடல் அரசு உதயமாக நம்முடைய பணி மும்முரமாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

44
உடன்பிறப்புகள் அப்செட்

திமுகவில் சேர்ந்த கையோடு வைத்திலிங்கம் அதிமுகவில் இருந்து 10,000 பேரை தட்டித் தூக்கி திமுகவில் சேர்த்தது கண்டு முதல்வர் ஸ்டாலின் வியந்து போய் விட்டார். திமுகவில் சேர்ந்த உடனே ஸ்டாலின் மனதில் இடம் பிடித்த அவருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சீட் கன்பார்ம் என தகவல் வெளியாகி உள்ளது. 

அதிமுகவில் இருந்து வருபவர்களுக்கெல்லாம் சீட் கொடுத்தால் கட்சிக்காக காலம் காலமாக உழைத்த நாம் என்ன செய்வது? என ஒரத்தநாடு, டெல்டா திமுக உடன்பிறப்புகள் கடும் அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories