Actor Vijay:விஜய் மாநாட்டுக்கு லட்சக்கணக்கான பேர் வருவாங்க பார்த்தா! இவ்வளவு பேர் மட்டும் தான் பங்கேற்பார்களா?

First Published | Sep 7, 2024, 8:22 AM IST

Actor Vijay Tvk Party Meeting: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. 

Actor Vijay

தமிழகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் விஜய் இருந்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு மட்டும் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். அந்த அளவிற்கு புகழுவின் உச்சியில் இருக்கும் தளபதி விஜய் திரையுலகை விட்டு விலகி அரசியலை நோக்கி நகர தொடங்கியுள்ளார். இருப்பினும் தமிழக மக்களுக்கு தன்னால் முடிந்த நல்ல விஷயங்களை செய்யவே அரசியலில்  என்ட்ரி கொடுக்கும் முடிவை எடுத்துள்ளதாக அவரது கட்சியினர் கூறி வருகின்றனர். 

TVK Vijay

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சி பெயரை அறிவித்த விஜய் கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டு தீவிர அரசியலில் களம் இறங்கிவுள்ளார். தனது முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Tap to resize

Bussy anand

இதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டு எஸ்.பி.யிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.  இதனிடையே மாநாடு நடைபெறும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கும் ரயில் போக்குவரத்திற்கும் இடைப்பட்ட பகுதியாக உள்ளது. எனவே அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். ஆகையால் காவல்துறை அனுமதி கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. 

Tamilaga Vettri Kazhagam

இந்த சூழ்நிலையில் மாநாட்டு மேடை அமையும் பகுதி தொடர்பாவும், மாநாட்டிற்கு வருபவர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு  மாநாடு நடைபெறும் நேரம்? மேடையில் யாரெல்லாம் அமருவார்கள்.  மாநாட்டிற்கு மின்சாரம் எங்கிருந்து எடுக்கப்படவுள்ளது. நில உரிமையாளரிடம் அனுமதி பெறப்பட்டுவிட்டதா உள்ளிட்ட 21 கேள்விகள் காவல்துறை தரப்பில் தவெக தலைவருக்கு எழுப்பப்பட்டிருந்தது. அதற்கான பதில் விளக்கத்தினை விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.

TVK meeting in vikravandi

இந்நிலையில் நடிகர் விஜய் தலைமையில் நடைபெறும் தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநாட்டில் லட்சக்கணக்காக தொண்டர்கள் பங்கேற்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை அலறவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 50,500 மட்டுமே பங்கேற்பார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஆண்கள் 30,000 பேர், பெண்கள் 15,000 பேர், முதியவர்கள் 5000 பேர், மாற்றும் திறனாளிகள் 500 பேர் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தாலும் தமிழக வெற்றிக்கழகம் நடத்தும் முதல் மாநாடு என்பதால் அதிகளவில் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விக்கிரவாண்டியில் நடைபெறும் மாநாட்டின் கேப்பாசிட்டியே 50,000 தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!