ஜனவரி வரைக்கும் வெயிட் பண்ணுங்க! எதிர்பாராத கட்சி கூட்டணிக்கு வரப்போகுது! ட்விஸ்ட் வைத்து பேசிய வினோஜ் பி.செல்வம்!

Published : Oct 18, 2025, 07:15 AM IST

தி.நகரில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். 2026 தேர்தலில் திமுக தோல்வியடையும் என்றும், ஜனவரியில் பாஜக கூட்டணியில் எதிர்பாராத கட்சிகள் இணையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

PREV
14
தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் கிளை நிர்வாகிகளுக்கு மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் ஏற்பாட்டில் தீபாவளி இனிப்பு மற்றும் பட்டாசு வழங்கும் நிகழ்ச்சி முத்துரங்கன் சாலையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

24
பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம்

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம்: நம்பிக்கை உள்ளவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஞானம் எல்லாம் பிறக்கவில்லை தேர்தல் பயம் வந்துவிட்டது.‌ 2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை தமிழகத்தின் இந்துக்கள் கொடுக்கப் போகிறார்கள். வாழ்த்து சொன்ன மாதிரியும் இருக்க வேண்டும் வாழ்த்து சொல்லாத மாதிரியும் இருக்க வேண்டும்.

34
திராவிட அல்வா கடை

500 வாக்குறுதிகளுக்கு மேல் மக்களுக்கு அல்வாவாக கொடுத்துவிட்டு, அதில் 20 சதவீதத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆகவே திராவிட அல்வா கடை என்பது நிரூபணமாகியுள்ளது. இதனை அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் எடுத்துக் கூறியுள்ளனர்.

44
எதிர்பாராத கட்சி கூட்டணிக்கு வரும்

தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக மாநில தலைமையும் தேசிய தலைமையும் தான் முடிவு எடுக்க வேண்டும். அன்புமணி ராமதாசை பாஜக தேர்தல் பொறுப்பாளர் சந்தித்தது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வினோஜ் பி.செல்வம் இந்த கூட்டணிக்கு ஜனவரி மாதத்தில் எதிர்பாராத கட்சியினர் வர இருக்கிறார்கள். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் பாஜக கூட்டணிக்கு வருகிறதா? என எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர் பல கட்சிகள் எனதான் குறிப்பிட முடியும் காலம் தான் அதை முடிவு செய்யும் என தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories