Coimbatore tourist places : கோடை வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்டது. இதனால் வீடுகளுக்குள் வெப்பம் அதிகரித்துவிட்டது. எனவே எப்போது பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கும், குளுமையான இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என ஏற்கனவே லிஸ்ட் போட தொடங்கிவிட்டனர் மக்கள். அந்த வகையில் எப்போதும் கோடை விடுமுறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் இடம் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு போன்ற இடங்கள் தான். ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் ஊட்டி போன்ற இடங்களுக்கு செல்வதால் கூட்ட நெரிசலும் அதிகமாக காணப்படும்,
மலைவாசஸ்தலங்கள்
அழகிய இடங்களை சுற்றிப்பார்க்கவும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். எனவே மக்கள் அதிகளவு செல்லாத அழகிய இடங்கள் ஏராளமாக உள்ளது. அதனை தற்போது பார்க்கலாம். தமிழ்நாட்டில் கோவை தான் இனிமையான வானிலை மற்றும் இயற்கையின் நெருக்கம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. இதன் அருகிலேயே பிரபலமான ஊட்டி போன்ற மலைவாசஸ்தலங்கள் உள்ளது.
வால்பாறை சுற்றுலா
கோவையை சுற்றி குறைத்து மதிப்பிடப்பட்ட மலைவாசஸ்தலங்கள் உள்ளன. எனவே அதில் முதல் தேர்வாக இருப்பது வால்பாறை, கோவையில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனைமலை மலைகளில் உள்ளது வால்பாறை, பரந்து விரிந்த தேயிலை தோட்டங்கள், அழகிய வனப்பகுதிகள்,
அழகான அழியானு அணை மற்றும் சுற்றுலா படகு சவாரி போன்றவை உள்ளது. இதுமட்டுமல்ல வன விலங்குகளை எளிதாகவும் பார்க்க முடியும், அதிகளவு அந்த பகுதியில் யானைகள், சிறுத்தைகள், மான்கள் என சாகச விரும்பிகளுக்கு பிடித்த இடமாகவும் உள்ளது.
காரமடை கோயில்
கோயம்புத்தூரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது காரமடை, கொங்கு மண்டலத்திற்கு முக்கிய ஆறாக இருப்பது பாவானி ஆறு, இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கிராமம், இயற்கையோடு அமைதியும் கலந்திருக்கும் கிராமத்தில் பிரசிதிபெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சாகசத்தை விரும்புவோருக்கு, மலையேற்ற தளங்கள் செல்பவர்களுக்கு பிடித்த இடமாக உள்ளது.
டாப்ஸ்லிப் அழகிய வனப்பகுதி
கோயம்புத்தூரிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாப்ஸ்லிப், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் அமைந்துள்ளது. டாப்ஸ்லிப் கண்காணிப்பு கோபுரம், சுற்றியுள்ள காடுகளின் அற்புதமான காட்சிகளைக் கொண்டுள்ளது. வங்காளப் புலிகள், யானைகள், காட்டெருமைகள் எளிதாக பார்க்கலாம்.
கடல் மட்டத்தில் இருந்து 800 அடிக்கு மேல் ஆனைமலை தொடரில் ஆனைமலை புலிகள் காப்பகத்திலும் டாப்சிலிப் அமைந்துள்ளது. பொள்ளாச்சியில் இருந்து 26 கிலோ மீட்டர் தரை வழியாக பயணித்து அங்கிருந்து மலைப் பகுதியில் 10 கிலோமீட்டர் பயணித்தால் டாப்ஸிலிப்பை சென்று சேரலாம். வரும் வழியில் ஆழியார் நீர்த்தேக்கமும் மூங்கில் தேக்கு மரங்களும் சுற்றுலா வாசிகளை வரவேற்கும்
சிறுவாணி நீர்வீழ்ச்சி மற்றும் அணை
கோயம்புத்தூரில் இருந்து மேற்கே 40 கி.மீ தூரத்தில் உள்ளது சிறுவாணி, அடர்ந்த காடுகள் மற்றும் பாறை நிலப்பரப்புகளால் சூழப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுற்றியுள்ள மிகவும் அழகிய இடங்களில் இயற்கை விருபிகளை ஈர்க்கும், சிறுவாணி நதியில் நீர் பாய்ந்தோடும் அழகு ரம்மியமானது. மழைக்காலங்களில், அதிக அளவு தண்ணீர் கொட்டும், இது ஒரு அற்புதமான காட்சியாக நிரூபிக்கிறது. காடு வழியாக மலையேற்றம் செய்யும் போது முழு நீர்வீழ்ச்சியையும் சிறப்பாகக் காணலாம்,