சினிமா மற்றும் அரசியலில் சாதித்த உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு, கடன்கள், சொகுசு கார்கள் உள்ளிட்ட தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. 47 வயதாகும் உதயநிதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.33 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் மற்றும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் - துர்கா தம்பதியின் மகனாக பிறந்தவர் உதயநிதி ஸ்டாலின். 1977ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி விஜய், சூர்யா, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் தயாரித்து பிரபலமானார்.
24
ஹீரோவாக அறிமுகமான உதயநிதி
தயாரிப்பாளராக வெற்றிநடை போட்டு வந்த உதயநிதி, ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு திரைக்கு வந்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதை அடுத்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக உதயநிதி நடிக்க தொடங்கினார். காமெடி படத்தை அடுத்து சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதை கொண்ட படங்களில் நடித்தார். இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடத்த மாமன்னன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
34
உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு
பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கிய உதயநிதி கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கடந்த 2022 டிசம்பர் 14ம் தேதி தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், சினிமா மற்றும் அரசியலில் சாதித்த உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு என்ன என்பதை பார்ப்போம்.
47 வயதாகும் உதயநிதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.33 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு வங்கிகளில் 1.22 கோடி வைப்பு நிதியாக வைத்துள்ளார். இவர் பெயரில் 11 கோடிக்கான கடன்களும் உள்ளது. மேலும் இவர் வைத்துள்ள தங்கத்தின் மதிப்பு 1600 கிராம் இதன் விலை ரூ.55 லட்சமாகும். இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.22.53 கோடிகளாகும். மேலும் ஹம்மர், பிஎம்டபிள்யூ, ரேஞ்ச் ரோவர், போர்ஷ் போன்ற சொகுசு கார்களும் உள்ளன.