மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பித்த பெண்கள் தங்களுக்கு கிடைக்குமா? என எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் குட்நியூஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என்ற பெயரில் ரேஷன் கார்டு வைத்துள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது.
24
புதிதாக விண்ணப்பித்த பெண்கள்
அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குறிப்பிட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோரைத் தவிர மற்ற குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், தளர்வுகள் அறிவிக்கப்படவர்கள் என ஏராளமானோர் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தனர்.
34
சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு வெளியிட்ட உதயநிதி
புதிதாக மகளிர் உரிமைத் தொகை வேண்டி 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மட்டும் சுமார் 28 லட்சம் மகளிர் விண்ணப்பங்களை அளித்தனர். ''புதிதாக மகளிர் உரிமைத் தொகை கோரிய விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி வருவாய்த்துறை மூலமாக நடந்து வருகின்றன.
இந்த பணிகள் முடிந்து தகுதியான மகளிருக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்'' என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், விடுபட்டவர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராணிப்பேட்டையில் அரசு விழாவில் பேசிய உதயநிதி, ''தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடியிலும் கூட மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் மீது முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருகிறார். விடுபட்டவர்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்'' என்று கூறியுள்ளார்.