இன்னும் 2 நாள் லீவு இருக்கு! குஷியில் பள்ளி கல்லூரி மாணவர்கள்!

Published : Jul 06, 2025, 07:41 AM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய ஜூலை 19ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
16
பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் விடுமுறை என்ற வார்த்தையை கேட்டாலே பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் குஷிதான். அதுவும் தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதும் 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில், மொத்த வேலை நாட்கள், பொது விடுமுறை எத்தனை நாட்கள் என்பதை என்ற விவரத்தை வெளியிட்டது. அதில், 2025-26ம் கல்வியாண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பள்ளி வேலை நாட்கள் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

26
பள்ளி மாணவர்கள்

அரசு விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே விடுமுறை வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.

36
ஜூன் மாதம்

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் போதிய விடுமுறை கிடைக்கவில்லை. ஜூன் மாதத்தில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை கிடைத்தது. அதுவும் பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை வந்துவிட்டதால் பள்ளி மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த மாதத்தில் சனி, ஞாயிறு வார விடுமுறை சேர்த்து மொத்தமாக பார்த்தால் ஜூன் மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது.

46
திருச்செந்தூர் கும்பாபிஷேகம்

இந்நிலையில் ஜூலை மாதம் தொடங்கியுள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடானது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

56
தூத்துக்குடி மாவட்டம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக 600 சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி நாளை தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

66
உள்ளூர் விடுமுறை

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கையொட்டி தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 7ம் தேதியான நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனினும், ஜூலை 7ம் அன்று அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ / மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூலை 19ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 7ம் தேதியான நாளை ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஜூலை 5 (சனிக்கிழமை) மற்றும் ஜூலை 6 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்ததால் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குஷியில் இருந்து வந்தனர். இதில், ஒரு நாள் எப்படி போனதே தெரியாத நிலையில் இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories