குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.!

Published : Aug 27, 2025, 09:44 AM IST

TASMAC Shop Holiday: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் FL உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மூடப்படும். 

PREV
15

தமிழக அரசின் மதுவிலக்கு ஆயுத் தீர்வுதுறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதுவும் பண்டிகை நாட்களான தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் வந்துவிட்டால் வருமானம் இரட்டிப்பாகும். அதேபோல் வார இறுதி நாட்களில் ரூ.150 முதல் ரூ.200 கோடிக்கு அளவுக்கு மது விற்பனையாகும். இந்த துறை வருமானத்தை கொட்டிக்கொடுக்கும் துறையாக இருந்து வருகிறது.

25

இந்நிலையில் புயல் மழை என வந்தாலும், தீபாவளி, பொங்கல் என விஷேச நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறை என்பதே இல்லை. அந்த வகையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன் படி, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் மட்டும் விடுமுறை விடப்படுகிறது.

35

இதை தவிர சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுக்கும் வகையில் அந்த, அந்த மாவட்டங்களில் குறிப்பிட்ட கோயில் விஷேச நாட்கள், குரு பூஜை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

45

இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நாகர்கோவில் முதல் சொத்தவிளை கடற்கரை, மேல்புறம் முதல் குழித்துறை, நாகர்கோவில் முதல் சங்குதுறை கடற்கரை, சுசீந்திரம் முதல் கன்னியாகுமரி, தோவாளை முதல் பள்ளிகொண்டான் அணை, கூனாலுமூடு முதல் மிடாலம், அஞ்சுகண்கலுங்கு முதல் தேங்காய்பட்டணம், செருப்பாலூர் முதல் திற்பரப்பு, வைகுண்டபுரம் முதல் வெட்டுமடை, மேல்புறம் முதல் குழித்துறை, மற்றும் பம்மம் முதல் குழித்துறை வரை உள்ள 11 இடங்களில் நடைபெற உள்ளது. இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் FL உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மூடப்படும்.

55

தடையை மீறி மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ, அவர்கள் மீது மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories