தொண்டரை பந்தாடிய பவுன்சர்கள்; விஜய் மீது பாய்ந்த வழக்கு - பெரம்பலூர் இளைஞர் செய்த தரமான சம்பவம்

Published : Aug 27, 2025, 09:04 AM IST

தமிழக வெற்றி கழக மதுரை மாநாட்டில் மேடை ஏற முயன்ற போது பவுன்சர்கள் தூக்கி வீசியதில் கயமடைந்ததாகக் கூறி இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் கட்சியின் தலைவர் விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
14
தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டத்தில் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடிகரும், கட்சியின் தலைவருமான விஜய் தொண்டர்கள் மத்தியில் சுமார் 250 மீட்டர் அளவுக்கு ராம்ப் வால்க் மேற்கொண்டார். அப்போது அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொண்டர்கள் பலரும் மேடை ஏற முன்பட்டனர். ஆனால் அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர்.

24
தொண்டரை தூக்கி வீசிய பவுன்சர்கள்

இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் மேடை ஏறி விஜய்யை அருகில் பார்க்க முற்பட்டார். அப்போது அங்கு இருந்த பவுன்சர்கள் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வீசினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இச்சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

34
மறுப்பு தெரிவித்த இளைஞர்

இதனிடையே வீடியோவில் பதிவாகி இருப்பது நான் கிடையாது என்று கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது தாயுடன் நேரில் வந்த அவர் மதுரை மாநாட்டில் பவுன்சர்கள் தூக்கி வீசியதில் எனக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார்.

44
விஜய் மீது வழக்குப்பதிவு

இளைஞரின் புகாரின் அடிப்படையில் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள சரத்குமார், “மேடையில் இருந்து பவுன்சர்களால் தூக்கி எறியப்பட்ட நபர் நான் தான். கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே என்னை யாரும் தாக்கவில்லை என்று கூறியிருந்தேன்.

ஆனால் இனியும் இப்படியொரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே தற்போது நான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். பவுன்சர்கள் தூக்கி வீசியதில் எனக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories