கோவையில் மே 22 மற்றும் 23 தேதிகளில் இரண்டு நாள் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபை மற்றும் சென்னை என்எஸ்இ அகாடமி இணைந்து நடத்தும் இந்த முகாமில், 10 ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை கலந்து கொள்ளலாம்.
படித்த படிப்பிற்கு வேலை தேடி லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளியூர் பயணம் செல்கிறார்கள். அதிலும் படித்த படிப்பிற்கு உரிய வேலை கிடைக்காமல் ஏதோ வேலை கிடைத்தால் போதும் என்ற நிலையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் படித்த படிப்பிற்கு இளைஞர்களுக்கு வேலை வழங்கிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி வருகிறது.
24
தமிழக அரசின் வேலைவாய்ப்பு முகாம்
அந்த வகையில் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்பை ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உருவாகிறது.
இந்த நிலையில் கோவையில் உள்ள இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபை, சென்னை என்எஸ்இ அகாடமியுடன் இணைந்து, இரண்டு நாள் வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது.
34
கோவையில் இரண்டு நாள் வேலைவாய்ப்பு முகாம்
மே 22 முதல் 23 வரை கோவை அவினாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸில் ஒரு வேலைவாய்ப்பு கண்காட்சியை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது தமிழக முதலமைச்சரால் கல்வி மற்றும் பயிற்சி மூலம் மாணவர்களின் திறமையையும் நலனையும் வளர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு அரசு முயற்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10வது படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை கலந்து கொள்ளலாம். ஐடி, வங்கிகள், வர்த்தகம் மற்றும் சேவை மற்றும் உற்பத்தித் தொழில்களைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தங்கள்ங நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யப்படவுள்ளனர்.