சூடா சுண்டலு.. விஜய் அண்ணா தம்பிங்க ஃபுல்லா மெண்டலு..! உதயநிதியை மிரட்டிய தவெக வெறியர்!

Published : Aug 23, 2025, 05:11 PM IST

தமிழக அரசியலில் விஜயின் தாக்கம், ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு, மற்றும் அவரது அரசியல் எதிர்காலம் குறித்த ஆழமான பார்வை.

PREV
17

தமிழக அரசியலில் சினிமாவின் தாக்கம் அளப்பரியது. பேரறிஞர் அண்ணாதுரை காலத்தில் தொட்டு இந்த மரபு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரால் வலுப்பெற்றது. தற்போது விஜயின் அரசியல் களமும், அவரது ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அழுத்தம் கூட்டுகிறது. திரைப்பிரபலங்கள் அரசியல் தரப்பை கைப்பற்றுவதும், மக்கள் மனங்களில் இடம் பிடிப்பதும் தமிழகத்தில் புதிய விஷயம் அல்ல.

27

விஜய் நடத்திய இரண்டும் மாநாடும் ஆட்சியில் இருந்து கோடி கோடியாக சம்பாதித்த அதிமுக, திமுகவை விட பிரமாண்டம் . இரண்டு மாநாட்டுக்கும் செம கூட்டம். தான் சம்பாதித்த காசை அள்ளி வீசி படம் காட்டி இருக்கிறார். ரசிக வெறியர்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் நடத்துவதுகூட அரசியலுக்கான தகுதிதான். ஸ்டாலின், எடப்பாடி இருவரும் யாரோ ஆரம்பித்த கட்சியில் சவாரி செய்கிறார்கள். விஜய் சொந்தமாக கட்சி ஆரம்பித்து சொந்த பணத்தில், சொந்த ரசிகக் கண்மணிகளை வைத்து அசத்தி கொண்டு இருக்கிறார். மிகப் பெரிய முயற்சி. தமிழக அரசியலில் சமீபத்திய திரைத்துறை நட்சத்திரம். அவரது ரசிகர்களையும், இளைஞர்களையும் கொண்டு இரண்டாம் இடம் பிடித்தால் கூட அது வெற்றியாக இருக்கும்.

37

திராவிடத்துக்கு மாற்று சக்தியாக இருக்கவேண்டும் அல்லது சாதி, மத குழுக்களுக்கு மாற்று சக்தியாக இருக்கவேண்டும். மொழிக்கு மாற்று சக்தியாக இருக்கவேண்டும். ஏதாவது ஒரு கான்செப்ட் வலிமையாக வைக்க வேண்டும். இந்த மூன்று கான்செப்டையும் விஜய் ஏற்கெனவே தொட்டுவிட்டார். மதத்தை பொறுத்தவரை பெரும்பான்மை பிஜேபி. சிறுபான்மை திமுக. சாதிக்கு விசிக, பாமக, அதிமுக, திமுக என்று பிரித்து கொண்டார்கள். மொழிக்கும் நாம் தமிழர் தமிழ் மட்டுமே.

47

விஜய் எல்லா இடத்திலும் தொட்டு வைக்கிறார். விஜய்க்கு நிச்சயம் டபுள் டிஜிட் ஓட்டு வங்கி உறுதி. தமிழ்நாடு இளைஞர்கள், இந்திய இளைஞர்கள் கூட்டத்தில் மாறுபட்டவர்கள். இலங்கை, வெஸ்டிண்டீஸ் மாதிரி ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வாழ்பவர்கள். ‘‘ஏங்க கூமாபட்டிக்கு வாங்க ...’’ என்று ட்ரெண்டு பண்ணினால் கூட வாயை பிளந்துகொண்டு போகும் கூட்டம் . இவர்களை எப்படி வேண்டுமானாலும் வளைக்க முடியும். பல கட்சிகளில் இருந்து அவர் இளைஞர்களை எளிதாக பிரிக்கலாம். இளைஞர்களை பிரித்தால் அவர்கள் வீட்டு தாய்மார்கள் ஓட்டை எடுத்து வந்துவிடலாம். விஜயின் ஓட்டுக்காக ரசிக வெறியர்கள் ஓடோடி வந்து முட்டுக் கொடுத்து வருகிறார்கள்.

57

தவெக மதுரை மாநாட்டில் எம்.ஜி.ஆர் புகழ்பாடியும், இபிஎஸ் மீது கோபத்தில் உள்ள ஓபிஎஸ், தினகரனுக்கும் மறைமுக அழைப்பு விடுத்தார் விஜய். அதேபோல விஜயகாந்த்தை பாராட்டி தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவருவது என பல கணக்குகளை தன் பேச்சில் வெளிப்படுத்தி அசத்தினார். கட்சி தலைவர் இப்படி என்றால் தொண்டர்களை கேட்கவா வேண்டும்? அதற்கும் ஒரு படி மேலே சென்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளனர். அதில், தவெக தொண்டர் ஒருவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘எங்கள் ஓட்டும் முழுவதும் விஜய் அண்ணணுக்கு தான். ஸ்டாலின் வந்தாலும் அடி விழும். உதயநிதி ஸ்டாலின் வந்தால் மண்டையில் வெட்டு விழும். சூடா சுண்டலு.. விஜய் தம்பிங்க ஃபுல்லா மெண்டலு’’ என சட்டை இல்லாமல், எதையும் சட்டை செய்யாமல் ஆக்ரோஷமாக கத்துகிறார் அந்த இளைஞர். அதிலும் அணில் குஞ்சுகள் என்றால் ஆத்திரம் கொள்கிறார்கள். இல்லை இல்லை.. நாங்கள் ‘அக்கினிக் குஞ்சுகள்’ என ஆர்ப்பரிக்கிறார்கள்.

67

இதையெல்லாம் பார்க்கும் போது தமிழகத்திலும், வெளிநாடுகளில் உள்ள அனைத்து விஜய் ரசிகர்களும் வெறித்தனமாக இருக்கிறார்கள். விஜய் என்ன சொன்னாலும் செய்வோம் என்கிற அளவிற்கு அவர்கள் வெறித்தனம் காட்டுவதை பார்க்க முடிகிறது. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை விஜய் ஏற்படுத்துவார் என கூறப்படுகிறது. கிட்டதட்ட 10 சதவீத்திற்கு மேல் விஜய் ஓட்டு வாங்குவார் என்பதே கள யதார்த்தம்.

77

‘‘நாய்கள் பல குரைக்கும்... அன்பு மட்டும் தான் எம் அண்ணன் ’’ என விஜய் கட்சியில் இருக்கும் சீமான் தம்பிகள் போல பிதற்றுவது தன் வீட்டில் நடக்காதவரை, தன் தாய் கண்ணீர் சிந்தாதவரை புரியாது. அதுவும் விஜய் கட்சியில் நிறைய சீமான் ரசிகர்கள் இருப்பது புரிகிறது. வெறும் ரசிக மனப்பான்மையில் சுற்றிக் கொண்டு இருந்தால் வெற்றி பெறவே முடியாது. வெறித்தனமான ரசிகர்களை பக்குவப்படுத்தி அரசியல் களத்தில் ஆளுமை மிக்கவர்களாக பக்குவப்படுத்துவதுதான் விஜயின் எதிர்கால அரசியலுக்கான அச்சாரமாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories