விஜய் வருங்கால கமல்! இது தமிழக வெற்றி கழகம் அல்ல வெட்டி கழகம்! கொத்தடிமை திருமா! ரவுண்ட் கட்டும் அர்ஜீன் சம்பத்!

Published : Aug 28, 2025, 10:04 AM IST

இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத், தவெக மாநாடு ரசிகர் மாநாடு என்றும், திமுகவின் ஏ டீம் என்றும் விமர்சித்தார். திமுக அரசு குற்றவாளிகளை பாதுகாப்பதாகவும், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

PREV
14

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதியாக வெற்றி பெற வேண்டும் அதை தமிழக அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். சிபி ராதாகிருஷ்ணனை ஆதரிக்க நாங்கள் விநாயகரிடம் பிரார்த்தனை செய்கிறோம். அதிமுக பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணியானது திமுகவை வீழ்த்த எண்ணம் உடைய அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணையும். தவெக அரசியல் கட்சி அல்ல, அரசியலில் திமுகவின் ஏ டீம் தமிழக வெற்றி கழகம்.

24

தவெக மாநாடு அரசியல் மாநாடு இல்லை. ரசிகர்கள் மாநாடு ரசிகர்கள் பாவம், பவுன்சர்கள் தூக்கி வீசுகிறார்கள். ரசிகர்கள் மீது அக்கறை இல்லை, கருணையும் கிடையாது. எப்படி மாநாடு நடக்க கூடாது என்பதற்கு உதாரணம் இந்த மாநாடு. சேர் உடைப்பதை கலாச்சாரமாக நினைக்கின்றனர். பிஜேபியை எதிர்க்க திமுக செய்யும் ஏற்பாடு அதற்கு உதாரணம் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம், விஜய் வருங்கால கமல்ஹாசன் எனவும் அது தமிழக வெற்றி கழகம் அல்ல வெட்டி கழகம் என விமர்சித்தார்.

34

தவெக பிஜேபியுடன் கூட்டணி வைத்தால் ஆதரிப்போம். கிறிஸ்தவ முஸ்லிம்களின் கூட்டணி தவெக ஆகும். ஆனால் இந்து மக்கள் கட்சி தவெக எதிர்ப்பு கட்சியாகும். தவெக இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவது எங்கள் நோக்கம் என்றும் தெரிவித்தார். பாமாகவில் நடைபெறுவது உட்கட்சி பிரச்சனை. திருமாவளவன் திமுகவின் கொத்தடிமை என்றும் தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் மவுனம் காத்தனர். திமுகவில் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. தற்காலிக பணியாளர்கள் ஆசிரியர்கள் விஷயத்தில் நல்ல முடிவு எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

44

திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலபடுத்துவது தான் நோக்கம். விசிக தான் அருந்ததி மக்களுக்கு துரோகம் செய்கிறது. அருந்ததியர் மக்களை ஆணவ கொலை செய்வது விடுதலை சிறுத்தை கட்சி என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசாக இருக்கின்றது. வன்னியரசு ராமன் குறித்து அவதூறாக பேசி வருகிறார். வைரமுத்து மோசமாக பேசுகிறார் அவரை ஏன் கைது செய்யப்படவில்லை, பெண்களை பேசிய விவகாரத்தில் பொன்முடி கைது செய்யப்படவில்லை, இந்த அரசு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுகிறது, ஆனால் இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூற ஏன் முன்வரவில்லை. அனைவருக்குமான அரசு என சொல்கிறது. ஆனால் ஒரு தலைபட்சமாக இந்த அரசு செயல்படுகிறது என விமர்சித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories