தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 10 பேர் கொண்ட பிரசாரக் குழுவை அக்கட்சயின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், திமுக தலைமையில் இந்தியா கூட்டணியும் களம் காண்கின்றன. தேமுதிக, அமமுக, ராமதாஸ், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தற்போது வரை தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாத நிலையில் சீமான் தனித்து களம் காண்கிறார். விஜய் தரப்பு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும் அதில் சேரும் கட்சிகள் தற்போது வரை இறுதியாகவில்லை.
23
பிரசார குழு அறிவிப்பு
இந்நிலையில் தமிழக வெற்ற கழகத்தின் தலைவர் விஜய் 10 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத் தோழர்களுக்கு வணக்க. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு மாநில, மாவட்ட தொகுதி அளவிலான தேர்தல் பிரசார பணிகளை மேற்கொள்ள பின்வரும் முறையில் தேர்தல் பிரசாரக்குழு அகை்கப்படுகிறது.
33
தேர்தல் பிரசாரக்குழு விவரம்
ஆனந்த்,
ஆதவ் அர்ஜூனா,
செங்கோட்டையன்,
பார்த்திபன்,
ராஜ்குமார்,
விஜய் தாமு,
செல்வம்,
பிச்சை ரத்தினம் கரிகாலன்,
செரவு மைதின்,
கேத்ரின் பாண்டியன்
மேற்கண்ட குழுவினர் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இந்த குழுவிற்கு கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெக் கேட்டுக் கொள்கிறேன்” குறிப்பிட்டுள்ளார்.