வழக்கமாக காலை 7 மணிக்குத் தொடங்கப்பட வேண்டிய உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தாமதமான வருகை காரணமாக சுமார் 2.30 மணி நேரம் தாமதமாகத் தொடங்கப்பட்டது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் கோலாகலமாகத் தொடங்கப்பட்டன. போட்டியில் சுமார் 1000 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்கின்றனர். சுமார் 12 சுற்றுகளிலா ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 50 வீரர்கள் பங்கேற்று போட்டி நடைபெற்று வருகிறது.
23
பாதுகாப்பு பணிகள் தீவிரம்
சுகாதாரத்துறை, கால்நடைத்துறை மற்றம் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னிட்டு ஆயிரத்திற்கும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
33
தாமதமாக வந்த துணைமுதல்வர் உதயநிதி
முன்னதாக போட்டி காலை 7 மணிக்கு தொடங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 2.30 மணி நேரம் தாமதமான காரணத்தால் பொட்டி தொடங்குவதும் தாமதமானது. 2 மணி நேரம் காளைகளின் உரிமையாளர்களும், பார்வையாளர்களும் காக்கவைக்கப் பட்டதால் பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். திடீரென ஆவசமடைந்த கிராம மக்கள் விழா ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.