'பராசக்தி' படக்குழுவினர் பிரதமர் மோடியைச் சந்தித்ததை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்ததற்கு, பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் கடும் பதிலடி கொடுத்துள்ளார். 2026-ல் ஒட்டுமொத்த தமிழகமும் சங்கிகளுடன் இணையும் என்றும் கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ (2026) படக்குழுவினர் பிரதமர் மோடியைச் சந்தித்தது குறித்து, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்திருந்தார். இதற்கு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளார்.
25
சங்கி குழுவுடன் சேரும் பராசக்தி
மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ‘பராசக்தி’ படக்குழுவினர் பங்கேற்றனர். இதைக் கிண்டல் செய்யும் விதமாக மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் (X) தளத்தில், “சங்கி குழுவுடன் பராசக்தி குழு... ஆனால் ‘ஜனநாயகன்’ முடக்கப்பட்டது” எனப் பதிவிட்டிருந்தார்.
35
அழுதுகொண்டுதான் இருக்கவேண்டும்
செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், “சங்கி குழுவுடன் பராசக்தி குழு இணைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், 2026-ல் ஒட்டுமொத்த தமிழகமே சங்கிகளுடன் இணையப் போகிறது. அப்போது ‘சங்கே முழங்கு’ என்று சங்கிகள் முழங்குவோம். இதைப் பார்த்து மாணிக்கம் தாகூர் உட்கார்ந்து அழுது கொண்டுதான் இருக்க வேண்டும்” என்றார்.
“பராசக்தி படக்குழுவினருக்குப் பிரதமர் மரியாதை கொடுத்ததை, டெல்லியில் தமிழுக்குக் கிடைத்த மரியாதையாக ஏன் பார்க்கக் கூடாது? இப்போது பராசக்தி படம் ரிலீஸாகி இருப்பதால் அவர்களை அழைத்திருக்கிறார்கள். ஒருவேளை விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸாகி இருந்தால், விஜய்யைக் கூட பிரதமர் அழைத்திருப்பார்” எனவும் தெரிவித்தார்.
55
காங்கிரஸுக்குக் கண்டனம்
மேலும், “தெலுங்கானாவில் நடிகர் அல்லு அர்ஜுனைக் காங்கிரஸ் அரசு கைது செய்தது. ஆனால் பிரதமர் மோடி தமிழ் கலைஞர்களைக் கௌரவிக்கிறார். தமிழுக்காகப் போராடியவர்களைக் காங்கிரஸ் எப்படியெல்லாம் ஒடுக்கியது என்பதைப் பராசக்தி திரைப்படம் தோலுரித்துக் காட்டியிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
“சென்சார் போர்டு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகப் பராசக்தி தயாரிப்பாளரே சொல்லியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, ஒரு படத்திற்கு மட்டும் சென்சார் போர்டு தடையாக இருப்பதாகச் சொல்வதை ஏற்க முடியாது,” எனவும் அவர் குறிப்பிட்டார்.