Chennai Election Result: தலைநகர் சென்னையில் திமுகவுக்கு செக்.! 16 தொகுதிகளில் தவெக முன்னிலை.. கதறும் ஸ்டாலின், உதயநிதி!

Published : May 04, 2026, 10:20 AM IST

Chennai Election Result: 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆளும் திமுக மற்றும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

PREV
14
சென்னையில் மொத்தம் 16 சட்டமன்ற தொகுதிகள்

சென்னையில் மொத்தம் 16 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதாவது ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி. நகர், மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகள் உள்ளனர்.

24
கடந்த தேர்தலில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக

கடந்த 2021 தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15-ல் திமுகவும், 1-ல் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் வெற்றி பெற்றன. அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த 2021 தேர்தலை போல 2026 சட்டமன்ற தேர்தல் இருக்காது. அதற்கு முக்கிய காரணம் தவெக தலைவர் விஜய் வருகை தான். இந்த 16 தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான திமுக தனது பிடியைத் தக்கவைக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும் என கூறப்பட்டு வந்தது. அதேசமயம், அதிமுக மற்றும் நடிகர் விஜய்யின் தவெக போன்ற கட்சிகள் சென்னையில் கடும் போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

34
கருத்து கணிப்புகள்

பெருவாரியான தொகுதிகளில் திமுக - தவெகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாக கருத்து கணிப்புகள் கூறி வந்தன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றதை அடுத்து வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப கட்டத்தில் ஆளும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. மூன்றாவது இடத்தில் தவெக இருந்தது.

44
16 தொகுதிகளில் தவெக முன்னிலை

இந்நிலையில் காலை 10 மணி நிலவரப்படி ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுகவை முந்தி தவெக பல்வேறு இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தவெக 94 இடங்களிலும், அதிமுக 71 இடங்களில், ஆளும் திமுக 54 இடங்களில் முன்னிலை இருந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை இருந்து வருகின்றனர். அதாவது முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, அண்ணா நகர் சிற்றரசு உள்ளிட்டோர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories