tvk vijay
அரசியல் களத்தில் விஜய்
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழ் திரைத்துறை மட்டுமில்லாமல் தென் மாநிலங்களில் விஜய்யின் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது.
ஒரு படத்திற்கு 100 முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வரும் விஜய், அனைத்தையும் தூக்கி எரிந்து விட்டு அரசியலில் இறங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தவர் கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டார். இதனையடுத்து விக்கிரவாண்டியில் மிகப்பெரிய அளவிலான மாநாட்டையும் நடத்தி அசத்தினார்.
vijay politics
தேர்தலை புறக்கணித்த தவெக
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்துள்ள விஜய், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலை புறக்கணித்தார். மாநாட்டிற்கு பிறகு அரசியலில் தீவிரமாக இறங்குவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திக்காமல் தனது பனையூர் அலுவலகத்திற்கு மக்களை அழைத்து வந்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதே போல மூத்த தலைவர்கள், தியாகிகளின் நினைவு தினம் மற்றும் பிறந்த தினத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவிக்காமல் வீட்டில் இருந்தே புகைப்படத்திற்கு மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செய்து புகைப்படம் மட்டுமே வெளியிடப்பட்டது.
TVK Vijay
களத்திற்கு செல்லும் விஜய்
இதனால் விஜய்யை அரசியல் விமர்சகள் விமர்சித்த நிலையில் அண்ணா பல்கலைகழக மாணவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவியை சந்தித்து புகார் மனுவை அளித்தார். இந்த நிலையில் அரசியலில் இறங்கிய பிறகு முதல் முறையாக மக்களை சந்திக்க களத்திற்கே விஜய் வரவுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு மாற்றாக காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து விளைநிலங்கள், நீர்நிலைகள் உட்பட 5,133 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.
Parandur Airport
போலீஸ் கட்டுப்பாடு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்ளுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உண்ணாவிரத போராட்டம், சாலை மறியல் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தவெக தலைவர் விஜய் நேரடியாக களத்திற்கு செல்லவுள்ளார். அப்பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு ஆதரவளிக்கவுள்ளார். எனவே பரந்தூருக்கு விஜய் வருவதால் பாதுகாப்பு தொடர்பாக போலீசாரிடம் தவெக சார்பாக மனு அளிக்கப்பட்டது.
TVK Vijay
மக்களை சந்திக்கும் விஜய்
ஏகனாபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் திடல் பகுதியில் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட காவல்துறை அனுமதி வழங்கப்படாததால் தனியார் மண்டபத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி பரந்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விஜய்க்கு போலீசார் சார்பாக 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
1. அனுமதிக்கப்பட்ட வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பரந்தூர் பகுதிக்கு செல்ல வேண்டும்.
2. பரந்தூர், நாகப்பட்டு, நெல்வாய், ஏகனாபுரம், உள்ளிட்ட 9 கிராம மக்களை மட்டுமே சந்திக்க விஜய்க்கு அனுமதி
3. பரந்தூர் மக்களை பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சந்திக்க அனுமதி
4. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பரந்தூரில் விஜய் இருக்க கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.