சரசரவென சரிந்த காய்கறிகள் விலை.! ஒரு கிலோ தக்காளி, வெங்காயம் விலை இவ்வளவு தானா.?

First Published | Jan 20, 2025, 7:02 AM IST

தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை ஏற்ற இறக்கம் இல்லத்தரசிகளுக்கு சவாலாக உள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் விலை சரிவை சந்தித்தாலும், சில காய்கறிகளின் விலை இன்னும் உயர்ந்தே காணப்படுகிறது.

tomato onion

தக்காளி, வெங்காயம் விலை

காய்கறிகள் தான் சமையலுக்கு முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமையல் செய்வது என்பது இயலாத காரியம். எனவே  இதன் விலை உயர்ந்தால் இல்லத்தரசிகளின் நிலை சிரமம் தான். அதுவும் தக்காளி விலை உயர்ந்தால் ஒரேடியாக உயர்ந்து 120 ரூபாயை தொடும் அதுவே குறைந்தால் 5 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு ஒரு கிலோ விற்பனை செய்யப்படும். இதே போலத்தான் வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களாக வரத்து குறைவின் காரணமாக உச்சத்தில் இருந்தது. வெங்காயம் ஒரு கிலோ  100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. 

tomato onion price

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

இதனால் வெங்காயத்தை அதிகளவு வாங்க முடியாமல் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்தனர். ஒரு கட்டத்தில் வெங்காயம் இல்லாமல் சமைக்கவும் கற்றுக்கொண்டனர். இந்தநிலையில் தான் தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து கடந்த டிசம்பர் மாதம் மத்தியில் இருந்து அதிகரிக்க தொடங்கியது.

இதனால் விலையானது சரிந்தது. அதன் படி ஒரு கிலோ தக்காளி 10 முதல் 15 ரூபாய்க்கும், வெங்காயம் ஒரு கிலோ 35 முதல் 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் குறைந்த அளவில் தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கிச்சென்ற மக்கள் கூடை கூடையாக வாங்கி சென்றனர்.


onion rate today

பொங்கல் பண்டிகை- காய்கறி விலை உயர்வு

அதே நேரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அதிகளவு மக்கள் காய்கறிகளை வாங்கியதால் பச்சை காய்கறிகளின் விலை உச்சத்தை அடைந்தது. அனைத்து காய்கறிகளின் விலையும் இரு மடங்கு அதிகரித்தது. ஏற்கனவே ஒரு கிலோ 30 ரூபாய்க்கு வாங்கிய காய்கறிகள் ஒரு கிலோ 80ரூபாயை தொட்டது.

இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்த நிலையில் பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில் காய்கறிகளின் விலையானது சரிய தொடங்கியது. இதன் படி நேற்று முதல் காய்கறிகளின் விலையானது குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.  இதன் படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Vegetable

காய்கறி விலை என்ன.?

பூசணிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 10 ரூபாய்க்கும்,  

கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Vegetable price

கோயம்பேட்டில் இன்றைய காய்கறி விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 25க்கும் தக்காளி ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Latest Videos

click me!