மீண்டும் ஆரஞ்ச் அலர்ட்.! இந்த மாவட்டங்களுக்கு இன்று மிக கன மழை - வானிலை மையம் எச்சரிக்கை

Published : Jan 19, 2025, 01:36 PM ISTUpdated : Jan 19, 2025, 01:39 PM IST

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

PREV
14
மீண்டும் ஆரஞ்ச் அலர்ட்.! இந்த மாவட்டங்களுக்கு இன்று மிக கன மழை - வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu Rains

தமிழகத்தில் மீண்டும் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (19-01-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. 
 

24
chennai rain

மிதமான மழைக்கு வாய்ப்பு

நாளை 20-01-2025: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வருகின்ற 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும்,

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 24-01-2025 மற்றும் 25-01-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. 
 

34
nellai rain

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

இன்று (19-01-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (20-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
 

44
Heavy Rain

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

19-01-2025 மற்றும் 20-01-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


 

Read more Photos on
click me!

Recommended Stories