விடுமுறை- மாணவர்கள் கொண்டாட்டம்
பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான், அதிலும் கொத்தாக விடுமுறை வந்தால் கேட்கவா வேண்டும் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பார்கள். அந்த வகையில் டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதம் மாணவர்களுக்கு கொண்டாட்ட மாதமாகவே அமைந்தது. அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் ஒரு பக்கம் மழையால் விடுமுறை கிடைத்தால் மறு பக்கம் அரையாண்டு தேர்வு முடிந்து 10 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. இதனால் மாணவர்கள் சுற்றுலாவிற்கும், தாத்தா, பாட்டியை பார்க்க சொந்த ஊர்களுக்கும் புறப்பட்டனர்.