விஜயை நம்பாதீங்க.. அவர் ஒரு பிராடு.. வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விடுவார்..! முன்னாள் மேனேஜர் பகீர்

Published : Feb 12, 2026, 12:30 PM IST

கரூர் சம்பவம், நடிகர் விஜயின் நடவடிக்கை உள்ளிட்ட பல விஷயங்களை குறிப்பிட்டு விமர்சித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரின் பேட்டி தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

PREV
15
தமிழக அரசியலில் விஜய் மீது புதிய சர்ச்சை

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், தற்போதைய திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளருமான பி.டி செல்வகுமார், விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பாக அவர் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். விஜய் தனது ரசிகர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த நேரடி உதவியும் செய்ததில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

25
இளைஞர்களை கெடுக்கும் தவெக விஜய்

“ஒரு தலைவர் என்றால் உடன் இருப்பவர்களை உயர்த்த வேண்டும். ஆனால் விஜய் ரசிகர்களை வெறும் அழைப்புகளால் மட்டுமே ஈர்க்கிறார்” என்றார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி, விருப்ப மனுக்கள் வாங்கச் செய்வதாகவும், அதிக மனுக்கள் வாங்கியவர்களுக்கு புகைப்பட வாய்ப்பு தரப்படும் என கூறி ஏமாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

35
முன்னாள் மேனேஜர் பி.டி செல்வகுமார்

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை குறிப்பிட்டு, அந்த நிகழ்விற்கான இடத் தேர்வில் அலட்சியம் நடந்ததாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் பி.டி செல்வகுமார் கூறினார். நிகழ்ச்சி நேரத்தில் ஒழுங்கின்மை இருந்ததாகவும், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் நலன் குறித்து சிந்தனை இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

45
விஜய் தலைமையை கேள்வி எழுப்பிய முன்னாள் நிர்வாகி

மேலும், விஜய் சினிமா மற்றும் அரசியல் துறைகளில் சக நடிகர்கள், ஊடகங்கள் மற்றும் உறவினர்களுடன் கூட தொடர்பு கொள்ளாதவர் என விமர்சித்தார். “கவர்ச்சி அரசியல் அல்லது பஞ்ச வசன அரசியல் போதாது. மக்களின் வாழ்க்கை குறித்து தெளிவான கருத்துக்கள் கூற வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார். அதே நேரத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் சிலர் தோல்வியடைந்தனர் அடைவார்கள் என கணித்தார்.

55
பி.டி செல்வகுமார் பரபரப்பு பேட்டி

இளைஞர்கள் தங்கள் பணத்தை வீணாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த அவர், அரசியல் முடிவை எடுக்கும் முன் மக்கள் சிந்திக்க வேண்டும் என்றார். தளபதி,தளபதி என்று சொன்னால் மட்டும் போதுமா, இதைக் கூறினால் ஒன்றும் நடக்காது, விஜயின் இதேபோன்று உள்ள பிற்போக்குத்தனத்தை கண்டிப்பாக நான் தட்டிக் கேட்பேன். விஜயை நம்பாதீர்கள். அவர் ஒரு பிராடு. வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விடுவார் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் முன்னாள் மேனேஜர் பி.டி செல்வகுமார்.

Read more Photos on
click me!

Recommended Stories