Job oppurtunity: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், ஓமன் நாட்டில் Production மற்றும் Finishing & Inspection பணிகளுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் படித்து விட்டு இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு சூப்பர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாவட்டம் தோறும் வேலை வாய்ப்புகள் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.
25
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு
அடுத்ததாக வெளிநாட்டிற்கு சென்று கை நிறைய சம்பளம் வாங்குபவர்களுக்காக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பிற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஓமன் நாட்டில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக விசா உள்ளிட்ட ஆவணங்கள் முதல் இருப்பிடம், உணவு ஆகியவற்றை ஏற்படுத்தி தருகிறது.
35
ஓமன் நாட்டில் வேலை
அந்த வகையில் ஓமன் நாட்டில் பணிபுரிய Production (Exposure in Melting/ Moulding/ Process Control) மற்றும் Finishing & Inspection (Exposure in Quality/ Final Inspection). விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். ஓமன் நாட்டில் பணிபுரிய Diploma (background) or ITI (background) தேர்ச்சி பெற்ற இரண்டு வருட பணி அனுபவத்துடன் கூடிய 22 முதல் 35 வயதிற்கு உட்பட்ட Production (Exposure in Melting/ Moulding/ Process Control) மற்றும் Finishing & Inspection (Exposure in Quality/ Final Inspection) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ. 41,000 முதல் ரூ.51,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
மேலும் உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்தினால் போதுமானது.
55
விண்ணப்பிப்பது எப்படி?
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் (Resume, Qualification, Experience Certificate, Passport Copy & Photo ஆகியவற்றை 28.2.2026-குள் அனுப்பவும். கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ்ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.