TVK chief and actor Vijay
தமிழகத்தில் திமுக, அதிமுக.வுக்கு மாற்று என்ற நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு பண்டிகையின் போதும் தனது சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால், தமிழர்களின் முக்கியமான தினங்களில் ஒன்றான சித்திரை முதல் நாள் தமிழ் வருடத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது.
TVK Vijay
சித்திரை திருநாள் வாழ்த்து
இப்படிப்பட்ட சூழலில் தமிழ் புத்தாண்டுக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. மாறாக தமிழ் புத்தாண்டுக்கு பதிலாக சித்திரை திருநாள் வாழ்த்துகள் என்று அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொண்டர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
திராவிட கழக சாயல்
விஜய் புதிதாக கட்சி தொடங்கி இருந்தாலும் திராவிட கழகங்களின் சித்தாந்தங்களை பின்தொடர்ந்தே TVKவும் செயல்படுகிறது. அந்த வகையில் திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கடைபிடிப்பது கிடையாது. முன்னதாக தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த கருணாநிதி சித்திரை திருநாளுக்கு பதிலாக தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தார்.
TVK Vijay
தமிழ் புத்தாண்டு
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தை முதல் நாளைக்கு பதிலாக சித்திரை முதல் தினமே தமிழ் புத்தாண்டாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக TVK தலைவர் விஜய் தை பொங்கள் தினத்தன்று பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.