மகளிர் உரிமைத் தொகை ரூ.2500.. 6 சிலிண்டர்கள்.. ஒரு பவுன் தங்கம்.. ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளை அலறவிடும் விஜய்

Published : Mar 07, 2026, 06:09 PM ISTUpdated : Mar 07, 2026, 06:23 PM IST

சமையல் கேஸ் விலை நம் வீட்டு பெண்களுக்கு பெரும் சுமை. விலை உயர்வால் காதுகளில் புகை, கண்கணில் நீர். இந்நிலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்.

PREV
14
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின விழாவை முன்னிட்டு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான திட்டங்களை அறிவித்துள்ளார். அதில் பெண்கள், குழந்தைகள் நலனில் பாதுகாப்பில் அக்கறை செலுத்த தவெகவில் தனி துறை ஏற்படுத்தப்படும். அந்த இலாகா என் நேரடி கட்டுப்பாடு கண்காணிப்பில் இருக்கும். 60 வரையுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும். மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் நிதியில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படும்.

24
6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்

சமையல் கேஸ் விலை நம் வீட்டு பெண்களுக்கு பெரும் சுமை. விலை உயர்வால் காதுகளில் புகை, கண்கணில் நீர். இந்நிலையில் அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அஞ்சலையம்மாள் அதி விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். சாதாரண உடையில் இருக்கும் அந்த பெண்கள் படை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.

34
திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம்

மேலும் அண்ணக் சீர் திட்டத்தின்படி பெண்களின் திருமணத்திற்காக ஒரு பவுன் தங்கமும், தரமான பட்டு சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக வழங்கப்படும். 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பள்ளிக் கல்வி இடைநிற்றல் இல்லாமல் செய்வதற்காக தாய் அல்லது பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும். வெற்றி பயணம் திட்டமாக அனைத்து அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

44
குழந்தைகளுக்கும் தங்க மோதிரம்

பொது போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்மார்ட் பேனில் பட்டன் பொருத்தப்படும். சுய உதவி குழுக்கள் மூலம் ரூ.5 லட்சம் 100 சதவீதம் மானியமாக வழங்கப்படும். தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்படும். அத்துடன் குழந்தைக்கு தேவையான பொருட்கள் பேபி வெல்கம் கிப்ட் மூலம் வழங்கப்படும். இதெல்லாம் சாம்பிள் தான். வரும் நாட்களில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories