ஒருபுறம் பெண்களை கைம்பெண்களாக மாற்றிக்கொண்டே மதுவை அரசே விற்பனை செய்துவிட்டு, மறுபுறம் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவும், அவர்களைக் கௌரவிப்பது வேடிக்கையானது என ராமதாஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மதுவால் கணவனை இழந்த இளம் கைம்பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு மதுவை விற்றுக்கொண்டு மகளிர் தினத்தைக் கொண்டாடுவது முரண்பாடுகளின் உச்சம்.