"வாய்மொழி வித்தையல்ல; நமக்கு சொல்மொழியே தாய்மொழி" - சர்ச்சைக்கு மத்தியில் விஜய் வெளியிட்ட அறிக்கை!

Ansgar R |  
Published : Oct 20, 2024, 09:21 PM IST

TVK Vijay : வருகின்ற அக்டோபர் மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடக்க உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு குறித்து அக்கட்சித் தலைவர் விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

PREV
14
"வாய்மொழி வித்தையல்ல; நமக்கு சொல்மொழியே தாய்மொழி" - சர்ச்சைக்கு மத்தியில் விஜய் வெளியிட்ட அறிக்கை!
TVK Vijay

தமிழ் சினிமாவை பொறுத்தவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறந்த நடிகராக, அதுவும் டாப் நடிகராக வலம்வந்தவர் தளபதி விஜய். இப்போது தன்னுடைய 69வது திரைப்பட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை தளபதி விஜய் நடிக்க உள்ள இறுதி திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், தன்னுடைய கலை உலக பயணத்திற்கு முழுவதுமாக குட்பை சொல்லிவிட்டு, முழு நேர அரசியல் தலைவராக செயல்பட உள்ளதாகவும் இவ்வாண்டு துவக்கத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஏற்கனவே அவருடைய கோட் திரைப்படம் மெகா ஹிட் ஆன நிலையில், அடுத்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருடைய 69 வது திரைப்படம் வெளியாகவுள்ளது.

TN Rain Alert: உஷார் மக்களே! அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 24 மாவட்டங்களில் பிச்சு உதற போகுதாம் மழை!

24
Actor Vijay

அந்த 69வது திரைப்படம் முற்றிலுமாக முடிந்த பிறகு, 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை நோக்கி தன்னுடைய பணிகளை தளபதி விஜய் மேற்கொள்ள தொடங்குவார். அது மட்டுமல்லாமல் இப்போது தனது திரைப்பட பணிகளை கவனித்து வரும் அதே நேரம், தன்னுடைய அரசியல் கட்சி பணிகளையும் அவர் விறுவிறுப்பாக கவனித்து வருகிறார். குறிப்பாக வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநில மாநாடு நடக்க உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

34
TVK Statement

நேற்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இன்னும் ஐந்து நாட்களில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்க வேண்டும் என்றும், அப்படி செய்யாவிட்டால் கட்டாயம் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்கப்படும் என்றும் அக்கட்சி சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இருப்பினும் விஜய் தரப்பிலிருந்து இன்னும் அதற்கு எந்தவிதமான பதிலும் வெளி வராத நிலையில், தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் த.வெ.க தலைவர் தளபதி விஜய்.

44
Vijay Statement

அவர் வெளியிட்ட அறிக்கையில் "அரசியல் களத்தில் வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை இல்லை. நம்மை பொறுத்தவரை செயல்மொழி தான் நமது அரசியலுக்கான தாய் மொழி" என்று கூறியிருக்கிறார் தளபதி விஜய். அது மட்டுமல்ல "கர்ப்பிணிப் பெண்கள், பள்ளி சிறுவர்கள், சிறுமியர்கள் நீண்ட காலமாக உடல் நலம் குன்றி இருப்பவர்கள். நேரில் இந்த மாநாட்டிற்கு வராமல், இணைய வழியாக நேரலையில் கட்சி மாநாட்டில் இணைந்திருக்க வேண்டும். அவர்களுடைய இல்லத்தில் இருக்கும் ஒருவராக இந்த கோரிக்கை விடுப்பதாக" தெரிவித்திருக்கிறார் விஜய். 

தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் கட்டுப்பாடோடும், கண்ணியத்தோடும் இருக்க வேண்டும் என்றும், வி.சாலை எனும் விவேக சாலையில் சந்திப்போம், வெற்றி நிச்சயம் என்று கூறியிருக்கிறார் விஜய்.

Traffic Diversion : சென்னை வாகன ஓட்டிகளே! தப்பி தவறிகூட அந்த பக்கம் போயிடாதீங்க! நாளை போக்குவரத்து மாற்றம்!

Read more Photos on
click me!

Recommended Stories