தென் மேற்கு பருவமழை முடிவடைந்து வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிழவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
மேலும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
chennai rain
அதேபோல் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது இரவு 10 மணிவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புயல் உருவாக உள்ளதாகவும் இந்த புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.