தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பிறகு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை மத்திய அரசு நியமித்தது. அன்று முதலே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே
மோதல் நீட்டித்து வருகிறது. ஆரம்பத்தில் தமிழக அரசிற்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே சுமூகமான உறவு நீடித்த நிலையில் நீட் மசோதாவை கிடப்பில் போட்ட பிறகு மோதல் தொடங்கியது. ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. இதேபோன்று ஆளுநர் ரவியும் அரசு விழாக்களில் தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை கூறுவது. பட்டமளிப்பு விழாவில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை பரப்புவது என அரசியல் கட்சிகளால் குற்றச்சாட்டிற்கு ஆளானார்.
அடுத்ததாக தமிழக சட்டப்பேரவையில் தமிழக அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்காமல் இரண்டு ஆண்டுகள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். மேலும் தமிழ்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்ற கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ்நாடு என்று அழைத்து வந்ததை தமிழகம் என மாற்ற முயற்சித்தார். இதனால் ஏற்பட்ட கண்டனங்களை தொடர்ந்து அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார்.
இதையும் படிங்க: Today Gold Rate In Chennai: தாறுமாறாக எகிறும் தங்கம்! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? நிலவரம் இதோ!
தமிழக முதலமைச்சரை விட தனக்கே அதிகாரம் இருப்பது போல் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கியும் உத்தரவிட்டார். ஆனால் மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தனது முடிவை வாபஸ் வாங்கினார். இது போன்று பல்வேறு சர்ச்சை கருத்திற்கு சொந்தக்காரரான ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைந்தும் தொடர்ந்து நீடித்து வந்தார்.
சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் டிடி அலுவலகத்தில் இந்தி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னை தொலைகாட்சி பொன்விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது "தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரியை விட்டு பாடியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என காட்டாக கூறியிருந்தார்.
இதையும் படிங்க: School Holiday: தீபாவளிக்கு 4 இல்ல 5 நாட்கள் விடுமுறை! அரசின் அறிவிப்பால் குஷியில் பள்ளி மாணவர்கள்!
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான ஜெனரல் வி.கே.சிங் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மேலிட பொறுப்பாளராக வி.கே.சிங் செயல்பட்டார். மேலும் தமிழ்நாட்டில் 4 மக்களை தொகுதிகளுக்கு பொறுப்பாளராக பாஜக சார்பில் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.