பொங்கல் விழாவில் அரசியல் பேசாதீங்க.. மேடையில் அவமானப்பட்ட தவெக தலைவர்.. என்ன நடந்தது?

Published : Jan 18, 2026, 11:21 AM IST

தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் பொங்கல் விழாவில் அரசியல் பேசியபோது கடும் எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
13
பொங்கல் விழாவில் பங்கேற்ற அருண்ராஜ்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பொங்கல் விழா நடந்தது. இதில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அருண்ராஜ், ''தவெக சார்பிலும், வருங்கால முதலமைச்சர் அண்ணன் (விஜய் ) சார்பாகவும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் விஜய்யை விட தவெக தலைவர் விஜய்க்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

23
திராவிட கட்சிகள் மீது புகார்

இதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான். 50 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர். இவர்களால் மக்களின் வாழ்க்கைத்தரம் மாறவில்லை. ஏனெனில் எங்கு பார்த்தாலும் ஊழல். ரோடு போடுவதில், கழிவுநீர் கால்வாய் அமைப்பதில், குடிநீர் குழாய் அமைப்பதில், பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுவதில் என எங்கு பார்த்தாலும் ஊழல் தான்.

விஜய் அரசியலுக்கு வந்த காரணம்

எல்லா ஒப்பந்தங்களிலும் எப்படி கமிஷன் அடிக்கலாம் என்று தான் யோசிக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் கொடுக்கும் மருந்துகள் தரமாக உள்ளதா? நாம் எல்லோரும் சேர்த்து கட்டும் வரிப் பணத்தில் தான் அரசாங்கம் நடக்கிறது. 

ஆனால் திட்டங்கள் எதுவும் முறையாக மக்களுக்கு சென்று சேர்வதில்லை. தனக்கு பணம், புகழ் எல்லாம் கொடுத்த மக்களுக்கு திருப்பி செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்'' என்றார்.

33
பொங்கல் விழாவில் அரசியல் பேசாதீங்க

இவ்வாறு அருண்ராஜ் அரசியல் குறித்து பேசும்போது கீழே அமர்ந்திருந்த ஊர் கமிட்டி தலைவர் அவர் அரசியல் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ''இந்த மேடைக்கு தலைவர் நான் தான். ஆகவே பொங்கல்பற்றி மட்டும் பேசுங்கள். வேற எதுவும் பேசக்கூடாது. அரசியல் விவகாரங்களை நீங்கள் தனி மேடையில் பேசுங்கள். 

இது பொது நிகழ்ச்சி. இங்கு அரசியல் பேசக்கூடாது'' என்று அவர் தெரிவித்தார். அதற்கு அருண்ராஜ் சரியென தலையாட்டினார். மேடையில் பேசிய தவெக தலைவர் அரசியல் பேசக்கூடாது என அவர் கூறியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

Read more Photos on
click me!

Recommended Stories