விசில் போடு.. தவெக தேர்தல் சின்னம் இதுதான்.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published : Jan 22, 2026, 02:25 PM ISTUpdated : Jan 22, 2026, 02:45 PM IST

TVK Whistle Symbol Allotted by ECI: நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

PREV
12
தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு

நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் பொது சின்னமாக விசில் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தவெக ஆட்டோ சின்னம், கிரிக்கெட் பேட் சின்னம், விசில் சின்னம் ஆகியவற்றை பரிந்துரை செய்திருந்த நிலையில், அவர்களுக்கு இப்போது விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

22
விஜய் விரும்பிய விசில் சின்னம்

இதில் விசில் சின்னத்தை தவெக தலைவர் விஜய் மிகவும் விரும்பியதாகவும், அந்த சின்னத்தையே ஒதுக்க வேண்டும் என தவெக கேட்டிருந்தது. இப்போது தவெக விரும்பிய விசில் சின்னத்தையே தேர்தல் ஆணையம் கொடுள்ளது 

விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் குஷியை உண்டாக்கியுள்ளது. மற்ற சின்னங்களை விட விசில் சின்னம் மிக எளிதாக பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கக் கூடிய ஒரு சின்னமாகும். 

இதேபோல் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories