விடாமல் விஜய்க்கு முட்டு கொடுக்கும் டிடிவி.தினகரன்! தவெகவுடன் கூட்டணியா? அவரே சொன்ன பரபரப்பு தகவல்!

Published : Sep 15, 2025, 08:29 AM IST

TVK AMMK Alliance: தவெக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விஜய் பிரச்சாரத்தில் எதிர்பாராத கூட்டம் கூடியது குறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும் என்றார்.

PREV
14
தமிழக வெற்றி கழகம்

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் இப்போதே விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை திமுக, அதிமுகவுக்கு மட்டும் போட்டியிருந்து வந்த நிலையில் தற்போது புதியதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் மற்றும் அண்ணாமலை, டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். இரண்டு முறை மாநாட்டை வெற்றிகரமாக முடித்து திமுக, அதிமுகவை அலறவிட்ட விஜய் பரப்புரையில் எதிர்பாராத கூட்டத்தை காட்டி ஆளுங்கட்சியின் வயிற்றில் புளியை கரைத்துள்ளார். பரபரப்புரையில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை பார்த்து அனைத்து கட்சிகளும் மிரண்டு போயியுள்ளனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் குறித்து டிடிவி.தினகரன் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.

24
டிடிவி.தினகரன்

அரியலூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: விஜய் பிரச்சாரத்தை நானும் டி.வி.யில் பார்த்தேன். நிறைய இளைஞர்கள், இளம் பெண்கள், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் திரண்டு வந்திருந்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் விஜய் பேசவில்லை. நான் அதை அப்படி பார்க்கவில்லை. இருந்தாலும் ஜெயலலிதா பாணியில் ஒருவர் பேசினால், அது மகிழ்ச்சியானதுதான்.

34
விஜய்

பெரம்பலூருக்கு விஜய் சென்றது நள்ளிரவு. நள்ளிரவு தாண்டிய பிறகு பிரச்சாரத்தை ரத்து செய்துதான் ஆக வேண்டும். தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகும் என நான் பலமுறை சொல்லிவிட்டேன். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணி உள்ளது. அதேபோல் விஜய் தலைமையில் ஒரு கூட்டணியும், சீமான் தனி அணியாக போட்டுகிறார். ஆகையால் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிச்சயம் உண்டு என்றார்.

44
எடப்பாடி பழனிசாமி

மேலும் பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்போது நாங்கள் எப்படி கூட்டணியில் இருக்க முடியும்? முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கக் கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. அதிலிருந்து மற்றவற்றை புரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories