வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக.வின் வாக்கு வங்கி 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறையும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக.வை சிலர் கபலீகரம் செய்ய நினைத்தனர். மத்திய பாஜக தான் அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியன் கருத்துக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூர் விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். சசிகலாவின் உத்தரவின் பேரில் 122 சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தனர்.
25
பெயரை குறிப்பிடாமல் கையெழுத்து வாங்கசொன்ன எடப்பாடி
கூவத்தூரில் நான் தான் முதல்வர் என குறிப்பிட்டால் சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போடமாட்டார்கள். ஆகையால் எனது பெயரை குறிப்பிடாமல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கையெழுத்து பெறுமாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
35
தன்மானம் தான் முக்கியம்னா இப்ப ஏன் டெல்லி போறீங்க..?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக அங்கம் வகித்து வந்தது. அதன் பின்னர் தான் அதிமுக.வும் அந்த கூட்டணிக்குள் வந்தது. அதிமுக கூட்டணிக்குள் வந்ததுமே நாங்கள் வெளியேறியிருப்போம். ஆனால் சில நலன் விரும்பிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே நாங்கள் சுமார் 4 மாத காலம் அந்த கூட்டணியில் அமைதி காத்து வந்தோம். தன்மானம் தான் முக்கியம் என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி இப்போது எதற்காக டெல்லி செல்கிறார்.?
டெல்லியில் உள்ளவர்களுக்கு தான் எடப்பாடி பெரிய நபர்
டெல்லியில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமி பெரிய நபராகத் தெரியலாம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 20 சதவீத வாக்குகளைப் பெற்றது. அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு வெறும் 10 சதவீத வாக்குகள் தான் கிடைக்கும். இரட்டை இலை, பணபலம், படை பலம் என அனைத்தும் இருந்தும் பழனிசாமி படுதோல்வியை சந்திப்பார்.
55
அதிமுக தோல்விக்கு நாங்கள் காரணமல்ல
வரக்கூடிய தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தால் அதற்கு நாங்கள் காரணம் கிடையாது. முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமி தான் காரணம். சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 4 கூட்டணிகள் அமையும். திமுக தலைமையில் ஒரு கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, விஜய் தலைமையில் ஒரு கூட்டணி, சீமான் தலைமையில் ஒரு கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.