மாதம் ரூ. 2000 உதவித்தொகை... மாணவர்களுக்கு 18 வயது வரை.! விண்ணப்பிப்பது எப்படி.? யாருக்கெல்லாம் கிடைக்கும்.?

Published : Sep 16, 2025, 10:55 AM IST

தமிழ்நாடு அரசின் "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின் கீழ்  குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி.? 

PREV
14
தமிழக அரசின் அன்பு கரங்கள்

அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற அவரவர் பகுதிகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் அல்லது மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம். தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள். மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து,

இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர், 18 வயது வரை மாதம் 2,000/ ரூபாய் உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

24
மாதாந்திர உதவித்தொகை

இந்த அறிவிப்பிற்கிணங்க, இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தமிழ் நாடு அரசால் வழங்கப்படும்.

34
திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

1. ஆதரவற்ற குழந்தைகள்(பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).

2. கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)

3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள்( பெற்றோரில் ஒருவர் இறந்து, (Physically/mentally challenged) மற்றொருவர் மாற்றுத்திறன் கொண்டவராக இருந்தால்)

4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)

5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)

ஆவணங்களுடன். "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற அவரவர் பகுதிகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம்.

44
தேவைப்படும் ஆவணங்கள்

1. குடும்ப அட்டையின் நகல்

2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்

3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பபண் சான்றிதழ்)

4. குழந்தையின்வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்

Read more Photos on
click me!

Recommended Stories