ஆசையாக காத்திருந்த மாணவர்களுக்கு ஷாக்.! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
கல்விக்கு முக்கியத்துவம்
தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஏழை,எளிய மாணவர்கள் ஏழ்மை சூழ்நிலைய காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை உள்ளது.
இதனை தடுக்கும் வகையில் கல்வி தொடர்பாக முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் காலை மற்றும் மதிய உணவு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அடுத்தாக கல்வி உதவி தொகையும் வழங்கி வருகிறது. அதன் படி அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கு செல்லும் போது புதுமைப்பெண், தமிழ்புதல்வன் என்ற திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
school student
மாணவர்களுக்கான கற்றல் திறன்
இதே போல அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் 4 ஆண்டுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மாநில மதிப்பீட்டு புலம் என்ற பெயரில் திறனாய்வு தேர்வுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இதன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
school student education
மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வுகள்
இந்த தேர்வு மூலம் மாணவ, மாணவிகளின் கற்றல் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த திறனாய்வு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்திருந்தது. இதன் படி இந்த தேர்வுக்கான அறிவிப்புகள் இரண்டு முறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் படி அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 9 வகுப்பு மாணவ, மாணவியர்கள் கடந்த டிசம்பர் 14ம் தேதி ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
school student exam
திறனாய்வு தேர்வுகள் ஒத்திவைப்பு
இந்த தேர்வானது கனமழை பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைடுத்து மாணவர்கள் இந்த தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் மீண்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,பிப்ரவரி 1ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) அறிவிக்கப்பட்டு இருந்தது.
TRUST EXAM DATE
திறனாய்வு தேர்வுகள் புதிய தேதி அறிவிப்பு
இந்தத் தேர்வை எழுதும் மாணவர்கள், பாரத சாரணியர் இயக்க வைர விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற இருந்த டிரஸ்ட் தேர்வு 08.02.2025 சனிக்கிழமை அன்று நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது