மன உளைச்சலில் டாஸ்மாக் ஊழியர்கள்! மிரட்டும் நடவடிக்கைகளில் தமிழக அரசு! கொதிக்கும் திமுக கூட்டணி கட்சி!

Published : Jan 26, 2025, 08:07 PM IST

தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்திற்கு செல்லவிடாமல் காவல்துறை தடுத்து நிறுத்தியதற்கு கண்டனம்.

PREV
15
மன உளைச்சலில் டாஸ்மாக் ஊழியர்கள்! மிரட்டும் நடவடிக்கைகளில் தமிழக அரசு! கொதிக்கும் திமுக கூட்டணி கட்சி!
மன உளைச்சலில் டாஸ்மாக் ஊழியர்கள்! மிரட்டும் நடவடிக்கைகளில் தமிழக அரசு! கொதிக்கும் திமுக கூட்டணி கட்சி!

தமிழ்நாட்டில் பாதிக்கப்படுகிற ஊழியர்கள் தங்களின் வாழ்வுரிமைக் காக்க போராடக்கூடாதா? எதிர்க்கட்சியாக இருந்தாலும்  போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டியது ஜனநாயக உரிமை.  டாஸ்மாக் நிர்வாகத்திற்கு, போராட்டங்களைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? என வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தமிழக வாழ்வரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனும் டாஸ்மாக் அரசு நிறுவனத்தில் 25,000 பணியாளர்கள் கடந்த 22 ஆண்டுகளாக தொகுப்பூதிய தற்காலிக, ஒப்பந்த முறையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரத்துக்கு பணிபுரிந்து வருகின்றனர்.  22 ஆண்டுகள் பணிபுரிந்தும், பணி நிரந்தரமோ, பணி விதிகளோ, அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியமோ, அடிப்படை வசதிகளோ இன்றி 10 மணி நேரத்துக்கு மேலாக மிகுந்த மன உளைச்சலில் பணிபுரிந்து வருகின்றனர்.  உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழலில், டாஸ்மாக் ஊழியர்கள் பெரும் அச்சத்தில் பணியாற்றி வருகின்றனர். 

25
TASMAC

இந்த நிலையில், பணி நிரந்தரம், அரசுப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம், பணி பாதுகாப்பு, இ.எஸ்.ஐ, ஓய்வூதியம், பணி விதிகள், ஏபிசி சுழற்சி முறை, பணி நிரவல் செய்ய வேண்டும். மேலும் திமுக தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதி எண் 153-ன் படி, 10 ஆண்டுகள் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும். மதுபான விற்பனையில் கேரளாவில் வழங்குவது போல அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தி மதுக்கூடமின்றி செயல்படுத்த வேண்டும். டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் சென்னை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது.  

35
TASMAC Employees

இப்போராட்டத்திற்காக சென்னையை நோக்கி வந்த டாஸ்மாக் ஊழியர்களை, அந்தந்த மாவட்டங்களிலேயே போராட்டத்திற்கு செல்ல விடாமல் தடுத்து, அவர்களை காவல்துறையின் மூலம், டாஸ்மாக் நிர்வாகம் கைது செய்திருக்கிறது. மேலும், பணியாளர்களை அச்சுறுத்தும் விதமாக மிரட்டும் நடவடிக்கைகளில் டாஸ்மாக் நிர்வாகம் இறங்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. 

45
dmk government

தமிழ்நாட்டில் பாதிக்கப்படுகிற ஊழியர்கள் தங்களின் வாழ்வுரிமைக் காக்க போராடக்கூடாதா? எதிர்க்கட்சியாக இருந்தாலும்  போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டியது ஜனநாயக உரிமை.  டாஸ்மாக் நிர்வாகத்திற்கு, போராட்டங்களைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? வாழ்வுரிமைக் காக்க போராட முயன்ற டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தோழர்களை போராட விடாமல், கைது செய்து விட்டால் அவர்களை முடக்கி விட முடியுமா? இப்படிப்பட்ட போக்கை டாஸ்மாக் நிர்வாகமும், காவல்துறையும் மாற்றிக்  கொள்ள வேண்டும். 

55
Velmurugan

இதுபோன்ற ஜனநாயக உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்காமல், தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த  வேண்டும்.  எனவே, போராட விடாமல் தடுத்து கைது செய்யப்பட்டிருக்கும், டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தோழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories