பழனி, திருச்செந்தூரை தொடர்ந்து இந்த கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை!

First Published | Jan 26, 2025, 7:32 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

பழனி, திருச்செந்தூரை தொடர்ந்து இந்த கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும் ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலமும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைணவக் கோவிலாகும். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.  இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். 

srivilliputhur andal temple

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக கோவில் முன்பு செல்போன்கள் பாதுகாக்கும் அறை அமைக்கப்படும்  பாதுகாப்பு அறையில் வைக்க ஒவ்வொரு செல்போனுக்கும் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 


Cell phone Ban

நேற்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் பரிசோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Murugan Temple

ஏற்கனவே அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில்,  3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிலர், மலைக்கோவிலில் உள்ள மிகவும் அரிதான மூலவர் சிலையை கருவறையை புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். இதனால் திருச்செத்தூர் மற்றும் பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. அதேபோல் உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!