திருச்சியில் தாமரைச் செல்வன் என்பவரை ஒரு கும்பல் துரத்தி, அவர் தப்பிப்பதற்காக காவலர் குடியிருப்புக்குள் நுழைந்தும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளி சதீஷ்குமார் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (25). ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சைட் சூபர்வைசராக பணியாற்றி வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் காலையில் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை பின்தொடர்ந்து வந்து பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துள்ளது.
25
இளைஞர் வெட்டி படுகொலை
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாமரைச் செல்வன் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அருகில் இருந்த பீமா நகர் காவலர் குடியிருப்பின், ஏ பிளாக்கில் தில்லைநகர் எஸ்.எஸ்.ஐ செல்வராஜ் வீட்டுக்குள் ஓடினார். இரவு பணியை முடித்து விட்டு செல்வராஜ் வீட்டுக்குள் இருந்திருக்கிறார். அப்போது காவலர் குடியிருப்புக்குள் சென்றால் உயிர் பிழைத்து விடலாம் என்பதால் காவலரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். ஆனால் அந்த கொடூர கும்பல் விடாமல் துரத்தி வந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலரின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டனர்.
35
துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்
இதனையடுத்து காவலர் குடியிருப்பில் வசிக்கும் பிற போலீசார் அந்த கும்பலை விடாமல் துரத்தி சென்றதில் திருவானைக்காவலைச் சேர்ந்த இளமாறன் மட்டும் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய குற்றவாளி சதீஷ்குமார் (26) ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரை பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடிக்க முயன்ற போது காவலரை வெட்டி விட்டு தப்பிக்க முயற்சித்துள்ளார். தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சதீஷ்குமாரின் வலதுகால் முட்டியில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த காவலர்கள் இருவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மற்றொரு தனிப்படையினர் மீதமுள்ள 3 பேரை தேடினர். அப்போது ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே உள்ள ரயில்வே பாலத்தின் கீழே பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் நந்தகுமாரின் வலது கை முறிந்தது. அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி பிரபாகரன், கணேஷ் ஆகியோருக்கு வலது கால்களில் முறிவு ஏற்பட்டது. பின்னர் 3 பேரையும் கைது செய்த போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
55
அதிர்ச்சி காரணம்
இந்நிலையில், முக்கிய குற்றவாளியான சதீஷ்குமாரிடம் நடத்திய விசாரணையில்: சதீஷ்குமார் திருச்சி விமான நிலையம் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சதீஷ்குமாரை பொது இடத்தில் வைத்து தாமரைச்செல்வன் அடித்ததால் அவமானத்தில் தாமரைசெல்வனை பழிதீர்க்க அந்த இடத்திலேயே சபதம் எடுத்தது தெரியவந்தது. முழு விசாரணைக்கு பின்னர் தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்.