சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள் அரசு ஊழியர்கள்! பொங்கலுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா?

Published : Nov 12, 2025, 08:56 AM IST

Pongal Holiday: 2026 ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகைக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. ஜனவரி 14 போகி முதல் ஜனவரி 18 ஞாயிறு வரை இந்த தொடர் விடுமுறை அமைய இருப்பதால் மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

PREV
15
பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் விடுமுறை என்றாலே அளவில்லாத குஷி கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவா வேண்டும். இந்நிலையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் போதிய அரசு விடுமுறை கிடைக்காததால் பள்ளி மாணவர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். அதாவது வார விடுமுறையை மற்றும் அரசு விடுமுறையாக மொகரம் பண்டிகையை தவிர வேறு விடுமுறை கிடைக்கவில்லை.

25
காலாண்டு தேர்வு விடுமுறை

பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விடுமுறை கிடைத்ததால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் செப்டம்பர் மாதம் 5ம் தேதி மிலாடி நபி வருவதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறையாகும். பின்னர் 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ம் தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற்றது.

35
தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை

இதனையடுத்து செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி காலாண்டு தேர்வு விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தது. வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும் நிலையில் இம்முறை 9 நாட்கள் விடுமுறை கிடைத்தது. . இதில் அரசு விடுமுறையான ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விடுமுறைகள் அடங்கும். மேலும் அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது. 

45
அக்டோபர் மாதத்தில் 14 நாட்கள் விடுமுறை

அதாவது தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்பட்டது. அதற்கு மறுநாள் செவ்வாய் கிழமை பொது விடுமுறையாக அரசு அறிவித்ததால் வார விடுமுறையை சேர்த்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது. அக்டோபர் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 14 நாட்கள் விடுமுறை கிடைத்தால் பள்ளி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது நவம்பர் மாதம் நடைபெற்று வருகிறது.

55
பொங்கல் விடுமுறை நாட்கள்

இந்நிலையில் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதாவது ஜனவரி 15 வியாழக்கிழமை தை பொங்கல், ஜனவரி 16 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 சனிக்கிழமை உழவர் திருநாள் வருகிறது. ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் அதாவது ஜனவரி 14ம் தேதி புதன் கிழமை போகி என்பதால் அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை அளித்து வருகிறது. இந்த விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories