குஷியோ குஷி! மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் 25,000 வரை! லம்பாக அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு!

Published : Nov 13, 2025, 09:07 AM IST

தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை 2024-2025 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளும் தகுதியான மாணவர்களுக்கு மாதம் ரூ.10000 முதல் ரூ.25000 வரை உதவித்தொகை. 

PREV
14
தமிழக அரசு

தமிழக அரசு பல்வேறு சூப்பர் நலத்திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. அதிலும், கல்விக்காவும், மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஆராய்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை வழங்கவுள்ளது. இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

24
தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம்

அதன்படி இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வாளர் போன்ற வல்லுநர்களின் திறமைகளை பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு “தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம்” என்ற திட்டத்தினை 2024-2025 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8.00 இலட்சத்திற்குள் இருத்தல் வேண்டும் மற்றும் மாணாக்கர் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும்.

34
ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை உதவித்தொகை

இளங்கலை மற்றும் முதுகலை மாணாக்கருக்கு மாதம் ரூ.10,000 வீதம் (6 மாதத்திற்கும்) முனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் (3 வருடத்திற்கும்) உதவித்தொகையாக வழங்கப்படும். 2025-2026 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்க புதிய இணையதளம் “fellowship.tntwd.org.in” உருவாக்கப்பட்டுள்ளது.

44
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்

மேலும் இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை இவ்விணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 2025 – 2026ஆம் கல்வியாண்டிற்கு தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் நவம்பர் 12ம் தேதியிலிருந்து டிசம்பர் 12க்குள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. மாணாக்கர்கள் மேற்காணும் திட்டத்தினை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories