இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

First Published | Jun 6, 2023, 7:36 PM IST

பெங்களூரு - சென்னைக்கு ரயிலில் 2 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பயணம் செய்வதற்கு ஏற்ப திட்டத்தை தெற்கு ரயில்வே உருவாக்கி உள்ளது.

பெங்களூரு - சென்னை இடையே புதிய அதிவேக ரயில் சேவையைத் திறக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை பற்றி முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளலாம். சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கர்நாடக தலைநகரான பெங்களூரு நகரம். இந்த 2 நகரங்களுக்கு இடையேயான துாரத்தை ரயிலில் கடக்க, தற்போது நான்கரை மணி நேரத்திலிருந்து, ஆறரை மணி நேரம் வரை ஆகிறது.

சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை, இந்த தொலைவை நான்கரை மணி நேரத்தில் கடக்கிறது. இந்த நிலையில், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு அதிவேக ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அதாவது, இந்த வழித்தடத்தில் அதிவேக ரயில்கள் பயணிப்பதற்காக தனி ரயில் பாதை அமைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

Tap to resize

இந்த ரயில் ஆனது மணிக்கு அதிகபட்சமாக 200 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும். புதிய ரயில் சேவையானது 16 பெட்டிகள் மற்றும் 2 எக்சிகியூட்டிவ்-கிளாஸ் பெட்டிகள் கொண்ட முழு முன்பதிவு ரயிலாக இருக்கும். பெங்களூரு மற்றும் சென்னை இடையிலான பயண நேரம் 2 மணி 15 நிமிடங்கள். பெங்களூருவில் உள்ள பைப்பனஹள்ளி மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே சுமார் 350 கிமீ நீளமுள்ள பகுதியை உள்ளடக்கும். இந்த கணக்கெடுப்புக்கு ரயில்வே அமைச்சகம் ரூ.8.3 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

200 கிமீ வேகத்தில் ஓடும் ரயில்களைக் கையாளும் வகையில் பாதையை மேம்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. மேம்படுத்தும் பணி இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரயில் சேவை தொடங்கப்படுவதால் பெங்களூரு - சென்னை வழித்தடம் இந்தியாவின் அதிவேக ரயில் பாதைகளில் ஒன்றாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சராசரியாக 81 கிமீ வேகத்தில் பயணித்து 4 மணி நேரம் 25 நிமிடங்கள் எடுத்து முடிக்க பெங்களூரு - சென்னை வழித்தடத்தில் அதிவேக ரயில் ஆகும்.

இதையும் படிங்க..ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 150 கேமராக்கள்.! இனி பொது இடங்களில் குப்பையை கொட்டினால் அவ்வளவுதான்

Latest Videos

click me!