இதற்கு அடுத்தகட்டமாக, ஆறுகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் கொட்டப்பட்ட குப்பை, கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து குப்பை கொட்டாத வகையில் சுவர்கள் எழுப்பப்பட்டு, கம்பி வேலிகள் அமைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையராக புதிதாகப்பொறுப்பேற்றுள்ள ஜெ. ராதாகிருஷ்ணன், பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.அவர் கூவம், அடையாறு கரையோரங்களில் குப்பை கொட்டப்படுவது தொடர்பாக அவர் ஆய்வு மேற்கொண்டார்.