சென்னை வழியாக செல்லும் 16 ரயில்கள் ரத்து - எவையெல்லாம் தெரியுமா?

First Published Jun 4, 2023, 8:26 PM IST

ஒடிசா ரயில் விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

ஒடிசா ரயில் விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை வழியாக செல்லும் 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 16 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

அதன்படி, கன்னியாகுமரியிலிருந்து சனிக்கிழமை காலை 5. 50 மணிக்கு புறப்படும் ஹௌரா அதிவிரைவு ரயில், சென்னையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் கோரமண்டல் விரைவு ரயில், ஹொராவிலிருந்து காலை 10. 50 மணிக்கு பெங்களூரு செல்லும் துராந்தோ விரைவு ரயில், பெங்களூரு - கவுகாத்தி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹௌராவிலிருந்து எா்ணாகுளத்துக்கு பிற்பகல் 2. 55 மணிக்கு செல்லும் அந்தியோதயா விரைவு ரயில், ஷாலிமரிலிருந்து சென்னை வரும் கோரமண்டல் விரைவு ரயில், சென்னையிலிருந்து இரவு 7. 20 மணிக்கு புறப்படும் ஹொரா விரைவு ரயில், மங்களூரிலிருந்து சந்திரகாஞ்சி செல்லும் விவேக் அதிவிரைவு ரயில், ரன்கபரா வடக்கு (அஸ்ஸாம்) - ஈரோடு அதிவிரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சனிக்கிழமை ஹொராவிலிருந்து பெங்களூருக்கு இரவு 10. 55 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில், சென்னை சென்ட்ரலுக்கு இரவு 11. 55 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அஸ்ஸாமின் திப்ருகரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து புறப்படும் கோரமண்டல் விரைவு ரயில், சந்திரகாஞ்சி அதிவிரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கவுகாத்தியிலிருந்து பெங்களூருக்கு செல்லும் வாராந்திர ரயில் செவ்வாய்க்கிழமையும், அஸ்ஸாமிலிருந்து (காமஹ்யா) பெங்களூரு செல்லும் அதிவிரைவு ரயில் புதன்கிழமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..ஒடிசா ரயில் சோகத்திற்கு ‘முக்கிய’ காரணம் இதுதான்.! ரயில்வே ஊழியர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் | முழு பின்னணி

click me!