ஷாக்கிங் நியூஸ்.. கோரமண்டல் விரைவு ரயில் விபத்து.. தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் பலி?

Published : Jun 03, 2023, 09:48 AM ISTUpdated : Jun 03, 2023, 10:18 AM IST

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 35 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 288ஆக உயர்ந்துள்ளது. 

PREV
14
ஷாக்கிங் நியூஸ்.. கோரமண்டல் விரைவு ரயில் விபத்து.. தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் பலி?

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக கோரமண்டல் விரைவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 

24

இந்நிலையில், கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயிலில் சென்னை வருவதற்கு  869 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. அந்த ரயிலில் பயணித்தவர்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தது. 

34

அதில் ஏசி வசதி கொண்ட 12 பெட்டியில்  869 பேர் சென்டரல் ரயில் நிலையத்திற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முன்பதிவு செய்யப்பட்டர்கள் என்பதால் பெயர் விவரம் தெரியவந்துள்ளது. மேலும், முன்பதிவு செய்யப்படாத 6 பெட்டிகள் உள்ளது. அதில், பயணித்தவர்கள் விவரங்கள் கிடைக்கவில்லை. இதனால், இவர்கள் நிலைமை என்ன என்பது தெரியாமல் இருந்தது. 

44

இந்நிலையில் முதற்கட்டமாக கோரமண்டல் விரைவு ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என வருவாய்துறை செயலர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தோரின் உடல்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

click me!

Recommended Stories