ஐடிஐ படித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இந்த பயிற்சி ஒரு வருடம் நடைபெறும்.
மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக ஐடிஐ படித்த மாணவர்களுக்கு மாதம் 14ஆயிரம் ரூபாய் உதவித்தொகையோடு பயிற்சியாறது வழங்கபடவுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில்,
2025-2026-ஆம் ஆண்டிற்கு மாதம் ரூ.14,000/- உதவித் தொகையுடன் ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு, 10.09.2025 அன்று மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
25
14ஆயிரம் ரூபாய் உதவித்தொகை
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் ITI-தொழில் பழகுநர் M-Electrician, Electrician, Fitter & Welder) ( (Mechanic Motor Vehicle, Mechanic Diesel, Auto ரூ.14,000/- உதவித் தொகையுடன் ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு, 10.09.2025 அன்று காலை 10:00 மணியளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இம்முகாமில், தகுதியுடையவர்கள் கலந்து கொண்டு. பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
35
பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் (MTC) மூலம் வழங்கப்படும் ஒரு சிறப்பு திட்டமாகும். இது ITI தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு ஒரு வருட கால தொழில்முறை பயிற்சியை வழங்குகிறது. இந்த பயிற்சி சென்னை MTC தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும். இதன் மூலம் பயிற்சியாளர்கள் தொழில் திறன்களை மேம்படுத்தி, போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு பெறலாம்.