முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை அதிரடி மாற்றம் - முழு விபரம் உள்ளே !!

First Published Jul 23, 2023, 12:12 PM IST

விரைவு ரயில் சேவையில் இன்று பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பற்றிய முழுமையான விவரங்களை இங்கு காணலாம்.

திருச்சி பணிமனையில் மேம்பாட்டு பணிக் காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புறப்படும் குருவாயூா் விரைவு ரயில் திருச்சி, மதுரை செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், “சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் சோழன் அதிவிரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) பொன்மலையுடன் நிறுத்தப்படும்.

நாகா்கோவிலிலிருந்து மும்பை செல்லும் விரைவு ரயில் (வண்டி எண் 16352) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) அரக்கோணம் வழியாக செல்வதற்கு பதிலாக திண்டுக்கல், கரூா், சேலம், ஜோலாா்பேட்டை, திருத்தணி, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண் 16127) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக செல்வதற்கு பதிலாக விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக குருவாயூரிலிருந்து சென்னைக்கு சனிக்கிழமை புறப்பட்ட ரயிலும் (வண்டி எண் 16128) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) இதே வழித்தடத்தில் இயக்கப்படும். மதுரையிலிருந்து சென்னைக்கு தினமும் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் (வண்டி எண் 22672) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) பிற்பகல் 4. 15 மணிக்கு (ஒரு மணி 15 நிமிஷம் தாமதம்) புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!

click me!