தமிழகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. பலத்த காற்று.. 8 மாவட்டங்களில் கனமழை - முழு விபரம்

Published : Jul 23, 2023, 09:20 AM IST

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

PREV
14
தமிழகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. பலத்த காற்று.. 8 மாவட்டங்களில் கனமழை - முழு விபரம்

தமிழ்நாட்டில் பருவமழை ஆரம்பித்துவிட்ட நிலையில், ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடை வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் இந்த மழையால் சற்றே நிம்மதியடைந்துள்ளனர் என்று கூறலாம்.

24

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

34

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

44

அதேபோல இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில்  மழை பெய்யும்” என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

5 லட்சம் முதலீடு செய்தால் 10 லட்சம் கிடைக்கும்.. இரட்டிப்பு லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்

click me!

Recommended Stories