ரயில்களில் அதிகப்படியான லக்கேஜ் கொண்டு செல்வதால் ஏற்படும் சிரமங்களை குறைக்க தெற்கு ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Train Luggage Rules : இந்தியாவிலேயே மிகப்பெரிய போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில்கள் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரயில்களில் பல கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள். பேருந்து கட்டணத்தை விட மிகவும் குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளோடு ரயில்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அதிகளவு ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். படுக்கை வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளது.
24
southern railway guidelines
ரயில்களில் கூடுதல் சுமை
மேலும் நீண்ட தூர ரயில்களில் உணவகமும் செயல்படுகிறது. இந்த சூழ்நிலையில் ரயிலில் பயணிக்கும் பயணிகள் மூட்டை மூட்டையாக, பெட்டி பெட்டியாக லக்கேஜ்களை கொண்டு வருகிறார்கள். இதனால் ரயில்களில் மற்ற பயணிகள் பாதிக்கப்படுவதோடு ரயில்களை இயக்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ரயில்களில் லக்கேஜ்களை கொண்டு செல்ல தெற்கு ரயில்வே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் ரயில் பயணிகளின் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் விதித்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
34
Train Luggage Rules
எத்தனை கிலோ லக்கேஜ் கொண்டு செல்லலாம்
இதன் படி ஏசி முதல் வகுப்பு பயணிகள் 70 கிலோ வரையிலும், 2ம் வகுப்பு பயணிகள் 50 கிலோ வரையிலும், ஏசி மூன்றாம் வகுப்பு பயணிகள் 40 கிலோ வரையிலும் , முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகளில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையிலும் எடுத்து செல்லலாம். மேலும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரையிலும் மட்டுமே லக்கேஜ் எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
44
train travel baggage
அபராதம் விதிக்கப்படும்- தெற்கு ரயில்வே
மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான லக்கேஜ் எடுத்து வரும் பயணிகளுக்கு ஒவ்வொரு 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைக்கு 1.5 மடங்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல வெடிபொருட்கள், ரசாயன மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் கொண்டு சென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அதிக லக்கேஜ் எடுத்துச் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது