Published : Apr 13, 2025, 01:21 PM ISTUpdated : Apr 13, 2025, 02:30 PM IST
தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக இருந்தாலும், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி குறித்த அறிவிப்பு திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்டு போஸ்டர் ஒட்டியிருப்பது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Congress party demands share in government : தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பிடித்து உள்ளது. இந்த கூட்டணியானது கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்,
உள்ளாட்சி தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்கள் என அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
26
BJP ADMK alliance
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி
அதே நேரம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் அவ்வப்போது திமுகவிற்கு ஷாக் கொடுத்து வருகிறது. அந்த கட்சிகளிடம் சமூகமாக பேசி திமுக தலைமை அமைதிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் எதிர் அணியில் உள்ள அதிமுக மீண்டும் பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக அறிவிப்பின் போது 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படுவதாகவும், மேலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படும் எனவும் அமித்ஷா அறிவித்தார்.
36
Dmk alliance parties
திமுகவிற்கு நெருக்கடி
இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் தமிழகத்தில் திமுக- அதிமுக மட்டுமே ஆட்சி அமைத்து வரும் நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி என்பது திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல அரசியல் களத்தில் இறங்கியுள்ள தவெகவும் கூட்டணி ஆட்சிஎன ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இதனை ஷாக்காக வைத்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் அமைச்சரவையில் பங்கு தொடர்பாக முழக்கத்தை எழுப்பி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே திமுக கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது.
46
Congress poster politics
காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளது. அந்த போஸ்டரில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என குறிப்பிட்டு 2026ஆம் ஆண்டின் தமிழகத்தின் துணை முதல்வர் செல்வப்பெருந்தகை என அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 200 தொகுதியை இலக்காக கொண்டு களம் இறங்கியுள்ள திமுகவிற்கு, காங்கிரஸ் கட்சியின் இந்த குரல் ஷாக் கொடுத்துள்ளது.
56
Congress party demands share in government
ஆட்சியில் பங்கு கேட்குமா காங்கிரஸ்
யாருடன் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் மத்தியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களே திமுக தலைமையிடம் கூட்டணி ஆட்சி தொடர்பான தங்களது கோரிக்கைகளை முன்வைப்பார்களா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே சுவரொட்டி ஒட்டிய காங்கிரஸ் மாநில செயலாளருக்கு விளக்கம் கேட்டு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், இந்த சுவரொட்டி விளம்பர செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதோடு, ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டதாகும்.
66
விளக்கம் அளிக்க உத்தரவு
உங்களுடைய இந்த செயலுக்கு தகுந்த விளக்கத்தை 15 தினங்களுக்குள் எழுத்துபூர்வமாக நேரில் வந்து விளக்க வேண்டும். தாங்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையுடன் கலந்துபேசி உங்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.