கனமழை காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை சனிக்கிழமை (10.01.2026) பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூர் பள்ளிகள் செயல்படும்.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கனமழை வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை ஊத்தியது. இதன் காரணமாக குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர் கனமழையை அடுத்து சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
23
சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்
இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை சனிக்கிழமை பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தொடர் மழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு 2025ம் ஆண்டு டிசம்பர் 03ம் தேதியன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 10.012026 அன்று (சனிக்கிழமை ) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் வியாழக்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
33
திருவள்ளூர் மாவட்டம்
அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு நாளை சனிக்கிழமை செவ்வாய்கிழமை பாடவேளைப்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. (NMMS தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகள் தவிர என அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.